மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ரூ.15 கோடியில் திருப்பணிகள் மும்முரம்
மன்னார்குடி : மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற வைணவத் தலமான ராஜகோபால சுவாமி கோயில் உள்ளது. 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில் தென்ன கத்து தெட்சின துவாரகை என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் து றை அமைச்சர் டிஆர்பி ராஜா முயற்சி காரணமாக 15 வருடங்களுக்கு பிறகு வரும் ஜனவரி 28ம் தேதி இக்கோயிலுக்கு வெகு விமரிசையாக கும்பாபி ஷேகம் நடைபெற உள்ளது.
கோயிலில் உள்ள 4 ராஜகோபுரங்களை புதுப்பிக்க ரூ 2.87 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பாலாலயம் நடத்தப்பட்டு பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் பங்களிப்புடன் சுமார் ரூ. 15 கோடியில் கும்பாபிஷேக பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
அதில் ஒருபகுதியாக அண்மையில் பந்தக்கால் நடப்பட்டு, கோயில் வளாகத்தில் சுமார் 3500 சதுரடி பரப்பளவில் பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை, கோயில் அறங்காவலர் குழு தலைவர் கருடர் இளவரசன், செயல் அலுவலர் மாதவன் பார்வையிட்டு பணிகளை விரைவு படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, பிரசன்னா தீட்சிதர் உடனிருந்தார்.