மஞ்சூர் சுற்று வட்டாரங்களில் பூத்து குலுங்கும் ‘ரெட்லீப்’ மலர்கள்
Advertisement
கண்களை கவரும் மெருன் மற்றும் சிவப்பு நிறங்களில் செடிகளின் இலைகளே பூக்களாய் காட்சியளிக்கின்றன. இதன் இலைகள் ஆரம்பத்தில் பச்சை நிறமாகவும், பின்னர் பழுப்பு, மஞ்சள் மற்றும் மெருன் நிறங்களாக மாறி இறுதியில் கடும் சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பதால் இந்த பூக்களை நிறம் மாறும் பூக்கள் எனவும் அழைக்கின்றனர்.
மஞ்சூர் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த ரெட்லீப் மலர்களை கண்டு ரசிப்பதுடன் அவற்றின் அருகில் நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து செல்கின்றனர்.
Advertisement