மணிப்பூரில் முகாம்களில் உள்ள மக்களை சந்தித்தார் ராகுல்
Advertisement
இம்ப்ஹல்: மணிப்பூரில் உள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று அங்குள்ள மக்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார். தலைநகர் இம்பாலில் உள்ள ஜிரிபாம் நிவாரண முகாமிற்கு சென்று மக்களை சந்தித்தார். மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை, கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். கடந்தாண்டு மே 3 முதல் மணிப்பூரின் மெய்தி, குக்கி சமூகத்திற்கிடையே கலவரம் நடந்து வருகிறது. மணிப்பூரில் இனக்கலவரத்தால் நடந்த மோதலில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
Advertisement