தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணை!

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தில் இருந்து பெருங்கால் பாசனத்தில் உள்ள நேரடி மற்றும் மறைமுக பாசன நிலங்களுக்கு பிசான பருவ சாகுபடிக்கு 01.11.2025 முதல் 31.03.2026 முடிய 151 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து 417.74 மி.கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், ஜமீன் சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பான்குளம். கீழ்முகம் மற்றும் தெற்கு கல்லிடைக்குறிச்சி கிராமங்களில் உள்ள 2756.62 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.

Advertisement

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தின் நடப்பாண்டிற்கான (2025-2026) முன்னுரிமை பகுதியான 1-வது மற்றும் 2-வது பகுதிகளைச் சார்ந்த மறைமுக பாசன நிலங்களுக்கு 01.11.2025 முதல் 31.03.2026 முடிய 151 நாட்கள் நீர் இருப்பு மற்றும் வரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப பிசான பருவ பயிர் சாகுபடி செய்வதற்காக 1855.67 மி.கன அடிக்கு மிகாமல் மணிமுத்தாறு அணையிலிருந்து திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நாங்குநேரி, பாளையங்கோட்டை மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டங்களில் உள்ள 11.134 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால் கால்வாய், மருதூர் கீழக்கால் கால்வாய், தெற்கு பிரதான கால்வாய் மற்றும் வடக்கு பிரதான கால்வாய்களின் கீழுள்ள 86,107 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன பரப்புகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு 01.11.2025 முதல் 31.03.2026 வரை தண்ணீர் திறந்து விடுவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருநெல்வேலி மாவட்டத்தில், வடக்கு கோடைமேலழகியான் கால்வாய் (2260 ஏக்கர்), தெற்கு கோடை மேலழகியான் கால்வாய் (870 ஏக்கர்). நதியுண்ணி கால்வாய் (2460 ஏக்கர்) கன்னடியன் கால்வாய் (12500 ஏக்கர்) கோடகன் கால்வாய் (6000 ஏக்கர், பாளையங்கால்வாய் (9500 ஏக்கர்). திருநெல்வேலி கால்வாய் (6410 ஏக்கர்) மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால் கால்வாய் (12762 ஏக்கர்). மருதூர் கீழக்கால் கால்வாய் (7785 ஏக்கர்), தெற்கு பிரதான கால்வாய்(12760 ஏக்கர்) மற்றும் வடக்கு பிரதான கால்வாய் (12800 ஏக்கர்) ஆகியவைகளின் கீழுள்ள மொத்தம் 86,107 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன பரப்புகள் பாசன வசதி பெறும்.

Advertisement