மணிமுத்தாறு அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க உத்தரவு
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசனத்தின் கீழுள்ள நேரடி மற்றும் மறைமுக பாசன பகுதிகளுக்கு (2756.62 ஏக்கர்) 29.08.2025 முதல் 17.09.2025 வரை கூடுதலாக 20 நாட்களுக்கு நீர் இருப்பை பொறுத்து 80.352 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தைச் சார்ந்த ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பான்குளம் மற்றும் தெற்கு கல்லிடைக்குறிச்சி கிராமங்களில் 2756.62 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
Advertisement
Advertisement