தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுய வருமானத்தில் மட்டுமே சேவை செய்கிறேன் : சமூக சேவையில் அசத்தும் மணிமேகலை!

சமூக சேவைகள் செய்வது என்பது எப்போதும் மக்களின் ஒற்றுமையையும், சக மனிதர்கள் மீதான பெரும் அக்கறையையும் வளர்க்கின்றன. ஆதரவற்ற மற்றும் பின்தங்கிய மக்களுக்கு உதவும் சமூக சேவை, அந்த எளிய மக்களுக்கு தேவையானவற்றை வழங்குவதோடு சம வாய்ப்புகளையும், முன்னேற்றங்களையும் உருவாக்குகிறது. மேலும் அனைவருக்கும் அடிப்படைத் தேவைகள் கிடைக்கச்செய்வதன் மூலம் மனித உரிமைகளைப் பாதுகாக்கிறது. சமூக சேவையே என லட்சியம் என்கிறார் சென்னை தி நகர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரியான மணிமேகலை. தனது ஓய்வூதிய சொந்த பணத்தினைக் கொண்டே பல்வேறு சேவைகளை தேவைப்படுவோருக்கு வழங்கி வருகிறார். இதற்காக யாரிடமும் எந்த விதமான நிதி உதவிகளையும் கேட்பதுமில்லை பெறுவதுமில்லை. இவரது குடும்பம் இவரது சமூக சேவை ஆர்வத்திற்கு பெரிதும் உதவி வருகிறது என்பது மற்றொரு சிறப்பம்சம்.

Advertisement

யார் இந்த மணிமேகலை..

மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று தனது பென்ஷன் பணத்தினை கொண்டும் தனது கணவரது ஓய்வூதிய பணத்தினையும் , தனது மகனின் வருமானத்திலுமே சமூக சேவைகளை செய்து வருகிறார். இவரை போன்றே இவரது பெற்றோரும் நிறைய சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தவர்கள் தான் என்கிறார். அவரது பெற்றோரை பின்பற்றித் தான் தனக்கும் சமூக சேவைகளில் ஈடுபாடு மற்றும் ஆர்வம் ஏற்பட்டது என்கிறார். திருமணத்திற்கு பிறகு கணவனின் முழு ஒத்துழைப்புகளுடன் தனது சேவையை தொடர்ந்தவர், தற்போது மகனுடன் மகளுடனும் சேர்ந்தும் சேவைகளை செய்கிறார். மணிமேகலை பன்முகத் திறமை கொண்ட எழுத்தாளரும் கூட. இதுவரை இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டு இருக்கிறார். சைக்காலஜியில் பட்டம் பெற்று மாணவ மாணவிகளுக்கும், ஆலோசனைகள் தேவைப்படும் பெண்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்கள் ஆகியோருக்கு இலவச ஆலோசனைகள் மற்றும் கவுன்சலிங் அளித்து வருகிறார். இவர் தன்னம்பிக்கை கருத்துக்களை பேசும் மேடைப் பேச்சாளர். நிறைய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகள் தனது தன்னம்பிக்கை உரை மூலமாக ஏற்படுத்தி வருகிறார். தலித் விமன் அமைப்பிற்கான சிறந்த சேவைகளை செய்கிறார் மணிமேகலை. மேலும் சமூக சேவைகளின் தலைவியான சிவகாசி IAS அவர்களின் தலைமையின் கீழ் பல்வேறு சேவைகளை செய்து வருபவர் இவர்.

இவரது உதவிகள் மற்றும் சேவைகள்..

துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதோடு ஒவ்வொரு மகளிர் தினத்திற்கும் அவர்களில் நூறு பேரை தேர்வு செய்து பாராட்டி பரிசு வழங்குவதோடு விருதுகளையும் அளித்து கௌரவப்படுத்துகிறார். அதில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு மணிமேகலை அவர்களையும் துப்புரவு தொழிலாளர்களையும் கௌரவப் படுத்தி வருகிறார்கள். அதே போன்று கடந்த ஆண்டு பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் 400 பேரை அழைத்து சென்னை தி. நகரில் மகளிர் தின விழாவில் விருதுகள் வழங்கி கௌரவித்தார். இவர் இரண்டு அரசு மருத்துவமனைகளை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். அவர்களுக்கு தேவையான பிரட், பிஸ்கட், பழங்கள் என வழங்கி வருகிறார். அதே நேரத்தில் ஆறு அரசு பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான பேனா, பென்சில், நோட்டு புத்தகங்கள் வழங்கி வருகிறார். மாணவ மாணவிகளுக்கு இலவச ஆலோசனைகள் அளிக்கிறார்.

மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் அவசியமான ஒன்று என்ற காரணத்தால் அரசு பள்ளிகளில் உளவியல் கருத்தரங்கங்கள், மற்றும் உளவியல் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. உளவியல் ஆலோசகரான இவர் MENTAL AWARENESS வகுப்பினை பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் எடுக்க அழைத்ததின் காரணமாக மாணவ, மாணவியர்களுக்கு தேவையான உளவியல் ஆலோசனைகள் வழங்கியும் வருகிறார்.ஏழைப் பெண்கள் துப்புரவு தொழிலாளிகளை இலவசமாக தனது சொந்த செலவில் சினிமா போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அழைத்து மகிழ்விக்கிறார். வெயில் காலங்களில் மோர் பந்தல் அமைத்து பலரின் தாகம் தணிப்பது இவரது வழக்கமான சேவைகளில் ஒன்றாகும். மருத்துவமனை வளாகங்களிலும் மோர் வழங்குவார்.

பெண்கள் முன்னேற்றம், ஏழை எளியவர்களுக்கு உதவுதல், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏதேனும் பிரச்சனையா சட்டென யோசிக்காமல் உடனே களத்தில் இறங்கி போராடும் குணம் இவரது ஸ்பெஷல். ஆட்டோ ஓட்டுனர்களுக்கு, சாலை பணியாளர்களுக்கு, துப்புரவு பணியாளர்களுக்கு என உதவி தேவைப்படும் அனைத்து மக்களுக்கும் ஓடிச்சென்று உதவும் இரக்க மனம் படைத்தவர் மணிமேகலை. சமீபத்தில் இவரின் இரண்டாம் புத்தகம் வெளியீட்டு விழா “பேசலாம் வாங்க” மகத்தான பெண் தலைவர் சமூகப் போராளி திருமதி சிவகாமி ஐ ஏ எஸ் அவர்களால் வெளியிடப்பட்டது. புத்தகங்கள் எழுதி வெளியிடுவதோடு அதற்கான வெளியீட்டு விழாவினை சிறப்பாக நடத்தி தகுதி வாய்ந்த சேவை பெண்மணிகளுக்கும் சாதனை பெண் மணிகளுக்கும் விருது மற்றும் பரிசுகளை தனது சொந்த செலவில் வழங்கி கௌரவப்படுத்துகிறார்.

பலரையும் தனது சேவைகள் மூலமாக மகிழ்வித்து பார்க்கும் சமூக சேவகி மணிமேகலையின் கணக்கிலடங்கா சமூகப் பணிகளை, உதவிகளை பாராட்டி பல்வேறு அமைப்புகள் அவருக்கு நிறைய பாராட்டுதல்களையும், கௌரவங்களையும் விருதுகளையும் வழங்கியது. தன்னலங்கருதாத இவரின் சமூக சேவைகளுக்காக பல்வேறு விருதுகளும் பாராட்டுதல்களும் தற்போது வரை கிடைத்து வருவதே இவரது சீரிய பணிக்கு சான்று. ஜெய்டன் வழங்கிய ஸ்டார் ஐகான் விருது, சிறந்த சமூக சேவையாளர் விருது, சக்தி விருது, ஜெயகாந்தன் விருது , சிறந்த சேவை செம்மல் விருது போன்ற பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். துக்ளக் ரீடர்ஸ் குழு இவருக்கு சிறந்த சமூக சேவகிக்கான விருதினை வழங்கி கௌரவித்தது. கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் சொல்லின் செல்வி விருது மற்றும் கார்பரேஷன் பள்ளி வழங்கிய அண்ணல் அம்பேத்கர் விருது என பல விருதுகளும் குறிப்பிடத்தக்கது.

- தனுஜா

ஜெயராமன்.

Advertisement

Related News