பிரபஞ்ச அழகி போட்டியில் மணிகா!
தாய்லாந்தில் நவம்பர் 21-ம் தேதி 74வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள அழகியை தேர்வு செய்வதற்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியின் இறுதிச் சுற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், ராஜஸ்தானை சேர்ந்த மணிகா விஸ்வகர்மா என்பவர் வெற்றி பெற்று கீரீடம் சூடினார். அவருக்கு மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024இன் வெற்றியாளர் ரியா சிங்கா கிரீடம் சூட்டினார்.பிரம்மாண்டமாக நடந்த இந்தப் போட்டியில் ஏராளமான போட்டியாளர்கள் கண்களைக்கவரும் விதமான ஆடைகளை அணிந்து, ஸ்டைலான நடைபோட்டு நடுவர்களின் கவனத்தை ஈர்த்தனர். இறுதி யில் ராஜஸ்தானை சேர்ந்த மணிகா விஷ்வகர்மா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தன்யா சர்மா, ஹரியானாவைச் சேர்ந்த மேஹக் திங்க்ரா ஆகியோர் அடுத்தடுத்து இடங்களைப் பிடித்தனர்.
இதையடுத்து நடப்பாண்டு இறுதியில் வரும் நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள 74வது மிஸ் யுனிவெர்ஸ் போட்டியில், இந்தியா சார்பில் மணிகா விஸ்வகர்மா போட்டியிட உள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரைச் சேர்ந்த மணிகா, தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். 22 வயதான மணிகா கடந்த ஆண்டு நடைபெற்ற மிஸ் யுனிவெர்ஸ் ராஜஸ்தான் போட்டியிலும் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. அரசியல் அறிவியல் (Political Sceince) மற்றும் பொருளாதாரப் பட்டப்படிப்பில் மூன்றாமாண்டில் படித்து வருகிறார். மேலும் பரதநாட்டியம், ஓவியம் ஆகிய கலைகளில் கைதேர்ந்தவர் மணிகா. வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்ட BIMSTEC Sewocon நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். ஜேஜே ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் மற்றும் லலித் கலா அகாடெமி ஆகிய விருதுகளையும் மணிகா பெற்றுள்ளார் என்பது கூடுதல் தகவல். இந்தாண்டு மிஸ் பிரபஞ்ச அழகி கிரீடத்துக்கான பொறுப்பை இந்தியா மணிகாவிடம் ஒப்படைத்திருக்கும் நிலையில் மணிகா ஷர்மா எங்கும் வைரலாகி வருகிறார்.