மான்செஸ்டரில் நாளை 4வது டெஸ்ட் துவக்கம்; இந்திய அணியில் சிஎஸ்கே வீரருக்கு வாய்ப்பு கிடைக்குமா?
4வது வீரராக கேப்டன் கில் விளையாட உள்ளார். 5வது வீரராக ரிஷப் பன்ட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களத்திற்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர் வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடினால், கருண் நாயர் இடத்திற்கு துருவ் ஜூரல் விளையாடக் கூடும். 6வது வீரராக ஆல் ரவுண்டர் ஜடேஜா, 7வதாக வாஷிங்டன் சுந்தர் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. 8வது வீரராக குல்தீப் யாதவ், சர்துல் தாகூர் யாருக்கு வாய்ப்பு என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த சூழலில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு தான் தற்போது பெரிய குறையாக இருக்கின்றது. ஆகாஷ் தீப், ஆர்ஸ்தீப் சிங் என இரண்டு வீரர்களும் தற்போது காயம் காரணமாக வெளியேறுகின்றார்கள். இதனால் பும்ரா, சிராஜ் 9 மற்றும் 10 ஆம் இடத்தில் விளையாடுவார். ஆனால் 11வது இடத்திற்கு யாரை தேர்வு செய்வது என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. அணியில் ஏற்கனவே இருக்கும் பிரசித் கிருஷ்ணாவை சேர்க்கலாமா? இல்லை தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சிஎஸ்கே வீரர் அன்சூல் காம்போஜை சேர்க்கலாமா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திருப்பதால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்படலாம் என தெரிகின்றது.
இந்திய அணி பிளேயிங் லெவன் உத்தேசம்: 1, ஜெய்ஸ்வால், 2, ராகுல், 3, கருண் நாயர்/சாய் சுதர்சன்/ துருவ் ஜூரல், 4, சுப்மன் கில், 5, ரிஷப் பன்ட், 6, ஜடேஜா, 7, வாஷிங்டன் சுந்தர், 8, சர்துல் தாகூர்/ குல்தீப் யாதவ், 9, பும்ரா, 10, முகமது சிராஜ், 11, பிரசித் கிருஷ்ணா.