சிறு தொழில் வளர்ச்சி கழகத்தில் மேனேஜர்
பணியிடங்கள் விவரம்:
1. மேலாளர்: 1 இடம் (எஸ்சி). சம்பளம்: ரூ.50,000-1,60,000. வயது: 34க்குள். தகுதி: சிஏ/சிஎம்ஏ தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. துணை மேலாளர் (வணிக மேம்பாடு): 7 இடங்கள் (ஒபிசி-4, எஸ்டி-2, எஸ்சி-1). சம்பளம்: ரூ.40,000- ரூ.1,40,000. வயது: 31க்குள். தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு முதல் வகுப்பில் தேர்ச்சியுடன் வணிக மேம்பாடு/சட்டம் மற்றும் மீட்பு பிரிவில் எம்பிஏ தேர்ச்சியும், 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. துணை மேலாளர் (நிதி மற்றும் அக்கவுன்ட்ஸ்): 5 இடங்கள் (ஒபிசி-3, எஸ்சி-2). வயது: 31க்குள். சம்பளம்: ரூ.40,000- 1,40,000. தகுதி: சிஏ/சிஎம்ஏ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.1500/-. இதை ஸ்டேட் வங்கி மூலம் ‘நெப்ட்’ வழியாக செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
www.nsic.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.11.2025.