மாமல்லபுரம், திருச்செந்தூர், கன்னியாகுமரியில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த தனி ஆணையம்: திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியது அரசு
07:37 AM Jul 08, 2025 IST
Share
சென்னை: மாமல்லபுரம், திருச்செந்தூர், குமரியில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த தனி அமைக்கப்பட்டுள்ளது. இந்த 3 இடங்களில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த மாஸ்டர் பிளான் தயார் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. சுற்றுலா வசதிகளை மேம்படுத்தவது தொடர்பாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுவத்துவது, கடற்கரைகளை மேம்படுத்துவது, பொழுதுபோக்கு சார்ந்த சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரிவு வாரியாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது.