தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாமல்லபுரம் இசிஆர் சாலையில் துருப்பிடித்த விளம்பர தூண் உடைந்து விழும் அபாயம்: அகற்ற வலியுறுத்தல்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் இசிஆர் சாலையில் மிக உயரமாக அமைக்கப்பட்ட இரும்பிலான விளம்பர தூண் துருப்பிடித்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் அதிகளவு வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், அப்பகுதியில் இதேபோல் வைக்கப்பட்ட பல்வேறு ராட்சத விளம்பர பேனர்களை உடனடியாக அகற்றுவதற்கு பேரூராட்சி மற்றும் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
Advertisement

சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி செல்லும் இசிஆர் சாலை வழியாக நாள்தோறும் அரசு பேருந்துகள் உள்பட ஏராளமான வாகனங்களில் பொதுமக்கள் சென்று வருகின்றனர். மேலும், இசிஆர் சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் அப்பகுதி ஓட்டல், ரிசார்ட், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தனியார் பிளாட் விற்பனை நிறுவனங்கள் சார்பில் ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் காற்றில் கிழிந்து, அவ்வழியே சென்று வரும் வாகன ஓட்டிகள்மீது விழுவதால், அங்கு அதிகளவில் வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

மேலும் ஒருசில ராட்சத விளம்பர பேனர்கள் எவ்வித பிடிமானமுமின்றி நிறுத்தி வைக்கப்படுவதால், அவை இருசக்கர வாகன ஓட்டிகள்மீது விழுந்து அதிகளவில் உயிரிழப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதேபோல், கடந்த 2019ம் ஆண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற பெண்மீது ராட்சத கட்சி பேனர் விழுந்ததில் பரிதாபமாக பலியானதை இங்கு குறிப்பிடலாம். இதைத் தொடர்ந்து, தற்போது சென்னை உள்பட பல்வேறு மாவட்டப் பகுதிகளில் ராட்சத விளம்பர பேனர்கள் அமைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனினும், நீதிமன்றத் தடையை மீறி ஆங்காங்கே ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இசிஆர் சாலை மற்றும் மாமல்லபுரம் நுழைவு பகுதியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரமாண்ட விளம்பர தூண் அமைக்கப்பட்டது. அதில் பொருத்தப்பட்ட ராட்சத பேனர் நாளடைவில் பலத்த காற்றில் கிழிந்து காணாமல் போய்விட்டது. எனினும், அந்த பிரமாண்ட இரும்பு விளம்பரத் தூணின் பல்வேறு பகுதிகளில் துருப்பிடித்து, முழுமையாக வலுவிழந்து, அந்தரத்தில் இருந்து கீழே உடைந்து விழும் அபாயநிலையில் உள்ளது. அப்பகுதியில் லேசான காற்று அடித்தால்கூட, இரும்பு தூணில் உடைந்த கம்பிகள், இசிஆர் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின்மீது விழுந்து, அதிகளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் அவலநிலை நீடித்து வருகிறது. இதேபோல், மாமல்லபுரம் பேரூராட்சி பகுதிகளிலும் தனியார் நிறுவனங்கள் மூலம் சில அரசியல் கட்சியினர் ராட்சத விளம்பர பேனர்கள் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த அபாயகர விளம்பர பேனர்களை உடனடியாக அகற்றுமாறு மாமல்லபுரம் பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுப்பதில் அலட்சியமாக உள்ளனர். எனவே, இசிஆர் சாலை மற்றும் மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் அபாயநிலையில் உள்ள ராட்சத இரும்பு விளம்பர தூண் உள்பட அனைத்து பிரமாண்ட விளம்பர பேனர்களை உடனடியாக அகற்றுவதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement