மல்லர்கம்பம், சிலம்பத்தில் அசத்தி வரும் மாற்றுத்திறனாளி மாணவர்
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் மல்லர் கம்பத்திலும் சிலம்பதிலும் அசத்தி வருகிறார். பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன் அரசு பள்ளி மாணவர் ஆன இவர் பிறக்கும் போதே உயர குறைபாட்டுடன் பிறந்துள்ளார்.
இருப்பினும் மனம்தளராத அவர் மல்லர் கம்பம் மற்றும் சிலம்பத்தில் தனது தடத்தை பதித்து வருகிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற மல்லர் கம்ப போட்டியில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மாவட்ட அளவியல் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார் செந்தமிழ்செல்வன்.