மல்லாங்கிணறு பேரூராட்சியில் பனை விதைகள் நடும் திட்டம்
*நிதியமைச்சர் தொடங்கி வைத்தார்
Advertisement
காரியாபட்டி : மல்லாங்கிணறில் பனை விதைகள் நடும் திட்டத்தை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சிக்குட்பட்ட நீர்நிலை உள்ள பகுதிகளில் 10 ஆயிரம் பனைவிதைகள் மற்றும் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி முதற்கட்டமாக அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள ஊருணியில், பனை விதைகள் நடும் திட்டத்தை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர், பேரூராட்சி தலைவர் துளசி தாஸ், செயல் அலுவலர் அன்பழகன், தாசில்தார் மாரீஸ்வரன் ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் போஸ், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ் வாணன், பேரூராட்சி கவுன்சிலர் வக்கீல் பாலச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement