மாலியில் துணிகரம் 5 இந்தியர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்: தீவிரவாத அமைப்புகள் கைவரிசை
பமாக்கோ: மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கிராமப்புற மின்மயமாக்கல் திட்டப் பணிகளில் ஈடுபட்டு வந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து இந்தியர்களை, துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது. மேற்கு மாலியில் உள்ள கோப்ரி என்ற இடத்தின் அருகே இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளதாக அந்நிறுவனத்தின் பிரதிநிதி மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த சம்பவத்தையடுத்து, அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த மற்ற இந்திய ஊழியர்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக தலைநகர் பமாக்கோவிற்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்தக் கடத்தல் சம்பவத்திற்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மாலியில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவு துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Advertisement
Advertisement