ஆப்பிரிக்க நாடான மாலியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கடத்தப்பட்டதாக புகார்
Advertisement
ஆப்பிரிக்கா: ஆப்பிரிக்க நாடான மாலியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கடத்தப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். மாலியில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களில் 2 பேர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். தென்காசி கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த இசக்கி ராஜா(36), கண்மணியாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் கடத்தபட்டுள்ளார். மாலியின் கோப்ரி நகரில் மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்திய தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். மின்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களில் 5 இந்தியர்கள் நேற்று முன்தினம் கடத்தப்பட்டனர். கடத்தப்பட்ட 2 பேரையும் பத்திரமாக மீட்க வேண்டும் என ஒன்றியம் மாநில அரசுகளுக்கு உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Advertisement