மதுரை ஆதீன மடத்தின் கிணற்றில் ஆண் சடலம்
இந்த நிலத்தின் ஒரு பகுதியில் புங்கை, பூவரசு மரங்களை நடவு செய்துள்ளனர். மறு பகுதியில் விவசாயம் செய்வதற்காக 5 ஆண்டுகளுக்கு முன் கிணறு தோண்டி உள்ளனர். 20 அடி நீள, அகலத்தில் தோண்டப்பட்ட சதுர வடிவ கிணற்றில் கோடை காலத்திலும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதில் நேற்று மாலை அடையாளம் தெரியாத ஆண் உடல் மிதப்பதாக முக்குடி விஏஓ முரளிதரன், திருப்புவனம் போலீசில் புகார் செய்தார்.
உடனே திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார், தடயவியல் நிபுணர் சிவகுரு முன்னிலையில் மதுரை அனுப்பானடி தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் இருந்து உடல் பாகங்களை மீட்டனர். இறந்து மாத கணக்கில் இருக்கும் என தெரிகிறது. உடல் பாகங்கள் முழுமையாக கிடைக்கவில்லை. சட்டை இன் பண்ணிய நிலையில் கருப்பு பேண்ட் முழுமையாக உள்ளது. எப்படி இறந்தார், வயது என்ன என எதுவும் தெரியவில்லை. இதனால் போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் சமீபத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களை சேகரித்து வருகின்றனர். இறந்தவர் யார் என தெரிந்தால் தான் கொலையா, தற்கொலையா என்பது தெரிய வரும்.