உலகின் முதல் நாடாக, இளம் வயதினர் புகை பிடிப்பதை தடை செய்தது மாலத்தீவு..!!
மாலத்தீவு: உலகின் முதல் நாடாக, இளம் வயதினர் புகை பிடிப்பதை மாலத்தீவு தடை செய்துள்ளது. 2007 ஜனவரி 1ம் தேதிக்குப் பிறகு பிறந்தோர், அனைத்து வடிவிலான புகையிலைப் பொருட்களை வாங்குவது, அவர்களுக்கு விற்பது ஆகியவற்றை தடை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், புகையிலை இல்லாத தலைமுறையை உருவாக்கவும் 18 வயதுக்குட்பட்டவா்கள் புகையிலை பொருள்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய விதியின்படி, 2007 ஜனவரி 1 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவா்கள் மாலைதீவில் புகையிலை பொருள்களை வாங்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது.
இந்தத் தடை அனைத்து வகை புகையிலைக்கும் பொருந்தும். விற்பனையாளா்கள் வயதை உறுதிப்படுத்திய பிறகே விற்பனை செய்ய வேண்டும். இந்தத் தடை, மாலைதீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும். எலக்ட்ரோனிக் சிகரெட் மற்றும் வேப்பிங் பொருள்களின் இறக்குமதி, விற்பனை, விநியோகம், வைத்திருத்தல் மற்றும் பயன்பாட்டுக்கு முழு தடை உள்ளது. இது அனைத்து வயதினருக்கும் பொருந்தும். 18 வயதுக்குட்பட்டவருக்கு புகையிலை விற்றால் 50,000 ருஃபியா (சுமாா் ரூ.2.8 லட்சம்) அபராதம், வேப்பிங் சாதனம் பயன்படுத்தினால் 5,000 ருஃபியா (ரூ.28,000) அபராதம் விதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.