Home/செய்திகள்/Malayappan Life Saver Young Passes Away Condolence Cm Mkstalin
இறக்கும் தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த மலையப்பன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
05:57 PM Jul 25, 2024 IST
Share
சென்னை: இறக்கும் தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த மலையப்பன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவரது மனிதநேயமிக்க செயலால் புகழுருவில் அவர் வாழ்வார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள்ளார். பள்ளி வாகனம் ஓட்டும்போது மாரடைப்பு ஏற்பட்ட சூழலில் வேனை, சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தி மாணவர்களை காப்பாற்றிய ஓட்டுநர் மலையப்பன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.