தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆயுதங்களால் இறப்பவர்களை விட அதிகம்; கொசுக்கள் பரப்பும் மலேரியாவால் ஆண்டுக்கு 6 லட்சம் உயிரிழப்புகள்: உலக விழிப்புணர்வு தினத்தில் அதிர்ச்சி தகவல்

இந்த உலகிலேயே மிகவும் ஆபத்தான மிருகம் என்றால் சிங்கம் அல்லது பாம்பு என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் மிகவும் ஆபத்தானது கொசு தான். உலகம் முழுக்க ஆயுதங்களால் இறப்பவர்களை விட கொசுக்கள் பரப்பும் நோய்களால் இறப்பவர்களே அதிகம். உலகில் உள்ள வேறெந்த உயிரினங் களையும் விட கொசுக்கள் அதிகமான மக்களைக் கொல்கின்றன. மலேரியா, டெங்கு, மஞ்சள் காய்ச்சல் என்று கொசுக்களால் பரவும் நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறக்கின்றனர். மனிதர்கள் மட்டுமல்ல, கால்நடைகள் மற்றும் பிற விலங்குகளும் கொசுக்களால் பாதிக்கப் படுகின்றன என்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. இதை கருத்தில் கொண்டு ஆண்டு தோறும் ஆகஸ்ட் 20ம் தேதி (இன்று) உலக கொசு ஒழிப்பு விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Advertisement

1897ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம்தேதி பிரிட்டீஷ் மருத்துவரான சர்ரொனால்ட்ரோஸ் மிக முக்கியமான தனது ஆராய்ச்சி கண்டுபிடிப்பு ஒன்றினை ஆதாரத்துடன் வெளியிட்டார். அனோபிலிஸ் என்னும் பெண் கொசு கடிப்பதன் மூலம் மலேரியா உருவாகிறது என்பதை அவரது ஆராய்ச்சி உறுதிப்படுத்தியது. இதன் பின்னரே கொசுக்கள் மீதான மக்களின் புரிதலும், எண்ண ஓட்டமும் தலைகீழாக மாறியது. அவரது கண்டுபிடிப்பை கவுரவிக்கும் வகையில் தான் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20ம் தேதி ‘உலக கொசு ஒழிப்பு தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்த வகையில் (2025) நடப்பாண்டு ‘சமமான உலகத்திற்காக மலேரியாவுக்கு எதிரான போராட்டம்’ என்ற கருப்பொருளில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மருத்துவ நிபுணர்கள் பல்வேறு தகவல்களை ெவளியிட்டுள்ளனர். இதுகுறித்து கொசுக்கள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ முன்னோடிகள் கூறியதாவது: மனிதர்கள் வாழும் பூமியானது 100 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக கொசுக்களின் தாயகமாக உள்ளது. அதாவது அவை ஆயிரக்கணக்கான உயிரினங்களுடன் வாழ்ந்து வருகின்றன.

அவை பல சுற்றுச்சூழல் அமைப்புகளில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. 3,500க்கும் மேற்பட்ட பெயரிடப்பட்ட கொசு இனங்கள் உள்ளன. 3,500 வகையான கொசுக்களில், 100 மட்டுமே மனித ரத்தத்தால் ஈர்க்கப்படுகிறது. பெரும்பாலானவை மனிதர்களை விட்டுவிடுகின்றன. ஆயிரக்கணக்கான கொசு இனங்கள் தாவரங்கள் மற்றும் பழங்களை உண்டு வாழ்கின்றன. கொசுக்கள் பூமியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவை மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களின் நடத்தையையும் பாதிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் கொசுக்களால் உருவாகும் மலேரியாவால் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கின்றனர். 6 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பதற்கும் மலேரியா காரணமாகிறது. மலேரியாவும் டெங்கு காய்ச்சலும் கொசுக்களால் மட்டுமே வருகிறது. இதில் மலேரியா கொசு என்பது இரவில் கடிக்கும். ஆனால், டெங்கு கொசு பட்டப்பகலில் நாம் விழித்திருக்கும்போதே கடிக்கும்.

எனவே இந்தக் கொசுக்களிடமிருந்து தப்பிக்கவும், தவிர்க்கவும் உரிய வழிகளை பின்பற்றுவதே அபாயத்தை தவிர்ப்பதற்கான முதல் வழியாகும். கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அழிப்பதுதான் இதற்கான முதல்வழி. வீட்டைச் சுற்றித் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்ற வேண்டும். குட்டைகள், தொட்டிகளின் கீழேயிருக்கும் வாளிகள், டயர்கள் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீண்ட நாட்களுக்கு ஒரே இடத்தில் தண்ணீரைத் தேங்க விடக் கூடாது. ஏனென்றால், இப்படிப்பட்ட இடங்கள்தான் கொசுக்களுக்கு விருப்பமானவை. இப்படிப்பட்ட தண்ணீரை அகற்றிவிட்டாலே கொசு உற்பத்தியைப் பெருமளவு தடுக்கமுடியும். அபாய நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.இவ்வாறு மருத்துவ முன்னோடிகள் கூறினர்.

இதையெல்லாம் பின்பற்ற வேண்டும்

* கொசுக்கள் தேங்கி நிற்கும் தண்ணீரை இனப்பெருக்கம் செய்யும் இடமாக விரும்புகின்றன. திறந்த நிலங்களை விட மூடிய மூடிகள் கொண்ட கொள்கலன்களில் தண்ணீரை சேமிப்பதன் மூலம் இனப்பெருக்க தளங்களின் வளர்ச்சி தவிர்க்கப்படலாம்.

* கொசுக்கள் பெருகுவதைத் தடுக்க, நீர் தேக்கத்தைமுறையாக சுத்தம் செய்வதை உறுதி செய்வது அவசியம். வாளிகள், குளிரூட்டிகள், பூந்தொட்டிகள் மற்றும் பிற வீட்டுக் கொள்கலன்களில் தண்ணீரை அடிக்கடி மாற்ற வேண்டும்.

* தண்ணீர் தேங்குவதைத் தடுக்க, உடைந்த வாளிகள்,பெட்டிகள், டிரம்கள் மற்றும் கேன்கள் போன்ற தேவையற்ற பொருட்களைத் தூக்கி எறியலாம். சுற்றியுள்ள இடத்தை சுத்தம் செய்வது அவசியம்.

* அந்தி மற்றும் விடியற்காலையில் கொசுக்கள் தாக்கும் வாய்ப்பு அதிகம். இந்த நேரத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும். வெளியே செல்ல வேண்டிய முக்கியமான சமயங்களில் கொசு விரட்டியை மறந்துவிடக்கூடாது.

* பயணம் செய்யும் போது கொசுக்களால் கடிக்கப்படாமல் இருக்க, முற்றிலும் ஆடை அணியலாம். வெளியில் இரவைக் கழிக்கும்போது படுக்கைகளில் வலைகளைப் பயன்படுத்த வேண்டும்.

10-15 நாட்களுக்கு பிறகே தெரியும்

கொசுக்கள் பரப்பும் மலேரியா என்பது பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் கடுமையான காய்ச்சல் நோயாகும். இந்த ஒட்டுண்ணிகள் பாதிக்கப்பட்ட பெண் அனோபிலிஸ் கொசுக்கள் கடிப்பதால் மக்களுக்கு மலேரியா பரவுகிறது. மலேரியா கொசுக்கள் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். பொதுவாக காய்ச்சல், தலைவலி மற்றும் குளிர்ச்சியாக இதன் பாதிப்புகள் வெளிப்படும். கொசு கடித்த 10 முதல் 15 நாட்களுக்குப் பிறகே மலேரியா தோன்றும். குழந்தைகள், இளம் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு எளிதாக தொற்றிக் கொள்ளும். இதேபோல் முதுகெலும்பு காய்ச்சல் எனப்படும் டெங்கு, சிக்குன் குனியா பாதிப்புகள் வாரங்கள், மாதங்கள் கடந்து வருடங்கள் வரை கூட நீடிக்கும். எனவே கொசு கடித்த சில நாட்களில் உடல்நல பாதிப்புகள் ஏதாவது தென்பட்டால் உடனடியாக உரிய மருத்துவரை சந்திப்பது நல்லது என்பதும் மருத்துவ நிபுணர்களின் அறிவுரை.

முற்றிலும் ஒழிக்க வாய்ப்பே இல்லை

உலகெங்கிலும் உள்ள சுமார் 150 நாடுகளில், கொசுக்கள் ஒரு பொதுவான பூச்சியாக உள்ளது. கொசுக்களை முற்றிலும் அழிப்பது சாத்தியமில்லை. மலேரியா, டெங்கு, மஞ்சள் காய்ச்சல், சிக்குன்குனியா போன்ற நோய்களைக் கடித்துச் சுமந்து செல்கிறது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும், சுமார் 500மில்லியன் நோய்த்தொற்றுகளுக்கும் ஒரு மில்லியன் இறப்புகளுக்கும் கொசுக்கள் மட்டுமே காரணம். இந்தியாவில் ஆண்டுக்கு 40 மில்லியன் மக்கள் கொசுக்களால் பரவும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். கொசுக்கள் தொடர்ந்து வெப்பமான காலநிலையில் தொற்று அல்லாத நோய்களை பரப்புகிறது. வெப்பமண்டலத்தில் உள்ள சூழல் ஆண்டு முழுவதும் உயிர்வாழ்வதற்கு ஏற்றதாக இருப்பதால், கொசுக்கள் அங்கு உறங்குவதில்லை என்று சர்வதேச ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

Advertisement

Related News