தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மலராத கட்சியின் திரைமறைவு சதியை அறிந்து கோபத்தீயை வளர்த்துக்கொண்டிருக்கும் இலைத் தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மனசுக்குள் கோபத்தீயை வளர்த்துட்டு இருக்காராமே இலைக்கட்சி தலைவர்... உண்மை தானா..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘உண்மையே தான்.. விரிவா சொல்றேன்.. இலைக்கட்சி தலைவருக்கு எதிராக கொடி தூக்கியிருக்கும் கோபிக்காரருக்கு வழிகாட்டுவது மலராத கட்சியின் டெல்லி தலைமையாம். வருகிற தேர்தலில் தமிழ்நாட்டில் எப்படியாவது கால் ஊன்றி விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அக்கட்சி, அதற்கான எல்லா குறுக்கு வேலையையும் செஞ்சிக்கிட்டு இருக்குதாம்..

Advertisement

இலைக்கட்சி தலைவரை ஈஸியா டீல் பண்ணிடலாம் என நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் எனது தலைமையில் தான் கூட்டணி என நெஞ்சை நிமிர்த்திட்டார். இதனால் டெல்லி தலைமை ஷாக்காகிபோனதுடன், அவருடனேயே பயணம் செஞ்சி, செய்ய வேண்டிய விதத்தில் செஞ்சிடலாமுன்னு இலைக்கட்சி தலைவர் சொல்வதை டெல்லி பாஜ கேட்டுக்கிட்டிருக்காம்... அதே நேரத்தில் கோபிக்காரரை கைக்குள் வைத்துக்கொண்டு கலகம் செஞ்சதே டெல்லி பாஜ என இலைக்கட்சி தலைவரின் அடிப்பொடிகள் அடிச்சி சொல்றாங்க..

ஒன்றிய நிதி மந்திரியை சந்தித்ததோடு மட்டுமல்லாமல் தேவர்ஜெயந்தி விழாவுக்கு கோபிக்காரரை அனுப்பியதும் அவர்கள் தானாம்.. இதுவரை மதுரைபக்கம் செல்லாத கோபிக்காரர் திடீரென பசும்பொன்னுக்கு வந்து பிரிந்துகிடந்த கூட்டாளிகளை சந்தித்தது ஏன்? எனவும் கேள்வி எழுப்புறாங்க.. இவ்வாறு கலகம் செய்து இலைக்கட்சி தலைவரை தங்களது கைக்குள் கொண்டுவருவதற்கான திட்டமாம் இது.. இதையெல்லாம் இலைக்கட்சி தலைவர் ரொம்பவே புரிஞ்சிக்கிட்டாராம்.. சமயம் கிடைக்கும்போது தான் யாருன்னு காட்டுவேன் என மனசுக்குள் கோபத்தீயை வளர்த்துக்கிட்டு இருக்காராம்..

இதற்கிடையில் தேனிக்காரரை நம்பி அவரோடு வந்த வானளாவிய அதிகாரம் கொண்டவரின் சன் வெளியே ஓடிவந்துட்டாராம்.. இனிமேலும் இங்கிருந்தால் வாழ்வு சிறக்காதுன்னு தெரிந்ததும் வெளியேறிட்டாராம்.. வைத்தியானவரும் ஏற்கனவே ஒதுங்கியே இருக்காராம்... மலராத கட்சியுடன் கூட்டணி சேர்ந்த தேனிக்காரருக்கு கடைசிவரை சீட் ஒதுக்கலையாம்.. ஒதுக்கிய ஒரு சீட்டிலும் அவரது தொகுதியை கொடுக்காமல் ராமநாதபுரம் கொடுத்து அவமானப்படுத்திய நிலையில் ரொம்பவே நொந்து போனாராம்..

தற்போது மலராதகட்சியின் கூட்டணியில் இருந்து வெளியே வந்த நிலையில், தற்போது மீண்டும் உறவு கொண்டுள்ளதால் ரெண்டு தொகுதி ஒதுக்கி அவமானப்படுத்திவிடுவார்கள் என்று தேனிக்காரருடன் இருப்பவர்கள் இப்பவே வேதனைப்படுறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தொகுதி சண்டை தீவிரமாகிட்டு இருக்கு போல..’’ என சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘புரம் என முடியும் கடலோர மாவட்ட இலைக்கட்சியின் மாவட்ட முக்கிய நிர்வாகியான சாமி பெயர் கொண்டவர், எம்எல்ஏ சீட்டுக்காக இப்பவே சீட் போட்டு வருகிறார்.

மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் ஒரு தொகுதி தனித்தொகுதி. மீதமுள்ள இரண்டில் இவரது மனைவி ஏற்கனவே போட்டியிட்டு தோல்வி அடைந்த தொகுதிகள். சென்டிமென்ட் காரணமாக இத்தொகுதியை புறம் தள்ளிய இவர், மீதமுள்ள மரியாதையுடன் துவங்கும் தொகுதியை எப்படியாவது சேலத்துக்காரரிடம் பேசி வாங்கி விட வேண்டுமென தீவிரமாக உள்ளார். ‘இந்த முறை மனைவிக்கு வேண்டாம். எனக்கு வாய்ப்பு கொடுங்க... கண்டிப்பா ஜெயிச்சு காட்டுகிறேன்...’ என கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்த தொகுதியை தமிழ் மாதம் ஒன்றின் பெயரை முன் கொண்ட மாஜி எம்எல்ஏ ஒருவர், தான் போட்டியிடுவதற்காக தலைமையிடம் கேட்டு வருகிறார். ஆனால், மாவட்ட முக்கிய நிர்வாகியோ, சீட்டை கைப்பற்றும் வேலையில் தீவிரமாய் இருக்கிறார். தனது அதிகாரத்தை பயன்படுத்தி தற்போதே அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளாராம். இதற்காக மரியாதையாக துவங்கும் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தனக்கு சாதகமான ஆட்களை நிர்வாகிகளாக நியமிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

இதனால், கட்சியில் நீண்டகாலமாக இருந்த பலர் அதிருப்தியில் உள்ளனராம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘ஊர் ஆட்சி தலைவி ஆக்கிரமிச்ச வீடு, சொந்த செலவுலே இடிச்ச மேட்டர் தான் பரபரப்பாக போய்கிட்டிருக்காமே.. விலாவாரியா சொல்லுங்க பாப்போம்..’’ என ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல பிரியாணிக்கு பெயர் போன 4 எழுத்து கொண்ட பேமசான ஊரு இருக்குது. இந்த ஊருக்கு பக்கத்துல சிவன்மலை பெயர் கொண்ட ஊர் இருக்குது. இந்த ஊருல பழங்குடியினருக்கு இடம் ஒதுக்கி அரசு வீடு கட்டி கொடுத்திருக்குது.

அந்த ஊர் ஆட்சி தலைவியாக குக்கர் பார்ட்டியோட ஒன்றிய செக்ரட்ரியோட ஒய்ப் செயல்பட்டு வர்றாராம். அவர் அந்த பழங்குடியினருக்கு கட்டிய வீடுகள் போக, மீதம் இருந்த இடத்தை வளைச்சு போட்டுட்டாங்களாம். அதோடு இல்லாம, 2 வீடுகளையும் கட்டிட்டாங்களாம். இதனால கொதிச்சு போன ஜனங்க ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பெரிய ஆர்ப்பாட்டமே நடத்தியிருக்காங்க. வட்ட ஆட்சி உயர் அதிகாரி, வட்டத்தோட வளர்ச்சி அதிகாரின்னு பலபேரு அங்கு சென்று ஆய்வு நடத்தியிருக்காங்க. ஆய்வு நடத்துனப்ப, இதைப்பார்த்து அதிர்ச்சியாகிட்டாங்களாம்.

இந்த ஆய்வுக்கு பிறகு வீடுகள் இருந்தால் தானே கேட்பீங்க, வீடே இல்லைன்னா என்ன செய்வீங்கன்னு, அவசர, அவசரமாக ஆக்கிரமிப்பு வீடுகளை சொந்த செலவிலேயே பொக்லைன் எந்திரம் கொண்டு வீட்டை இடிச்சுட்டாங்களாம். இதனால அதிகாரிகளும் சைலன்ட் மோடுக்கு போன நிலையில, தப்பு செஞ்சவங்க மேல ஏன் நடவடிக்கை எடுக்கலன்னு கேள்வி கேட்குறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘யுனிவர்சிட்டியில என்ன விவகாரமாம்..’’ என அடுத்த கேள்விக்கு தாவினார் பீட்டர் மாமா. ‘‘மான்செஸ்டர் மாவட்டத்துல புகழ்பெற்ற கவிஞர் பெயர் கொண்ட பல்கலைக்கழகம் செயல்பட்டு வருது. இந்த பல்கலையில் பொறுப்புகளை கவனிக்கும் உறுப்பினர் பதவிக்கு புதுசா நியமனம் நடந்திருக்கு. இந்த பதவிக்கு கட்டாயமா 10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி இருக்க வேண்டும். ஆனா எந்தவொரு தகுதியும் இல்லாத ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளாராம்.

தகுதியற்ற நபரை நியமனம் செய்திருப்பது பற்றி பேராசிரியர்கள் எல்லாம் ரகசியமாக ஆலோசித்தார்களாம். இறுதியாக பல்கலையில் முறைப்படி புகார் மனு அளிப்பது எனவும், நடவடிக்கை இல்லாவிட்டால் நியமனம் தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கை எடுக்கிறதுன்னு முடிவு செய்திருக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

Advertisement

Related News