மேக்கப் டுடோரியல்!
அழகான தோற்றத்தில் மின்ன யாருக்குதான் ஆசை இருக்காது. அதற்கு சிம்பிள் மேக்கப்பாவது கற்றுகொள்வது நல்லது. அதற்குதான் உதவுகிறது “மேக்கப் டுடோரியல் ஸ்டெப் பை ஸ்டெப்” (Makeup Tutorial step by step) செயலி. இந்த செயலி எப்படி மேக்கப் போடுவது என எளிமையான வழியில் கற்றுக்கொடுக்கும். முகத்தை எப்படி எந்த திசையில் கழுவி, சுத்தமாக வைத்துக் கொள்வது முதல், பவுண்டேஷன் போடுவது, கண்களுக்கு ஐஷாடோ, உதடுகளுக்கு லிப்ஸ்டிக் பூசுவது வரை எல்லாவற்றையும் வரிசையாகக் கொடுக்கும். செயலியை திறந்தால், வீடியோ அல்லது படங்களுடன் கூடிய வழிகாட்டுதல் பெறலாம். ஒவ்வொரு படியும் மெதுவாக சொல்லித் தரப்படும். சில செயலிகளில் கண்ணாடி முன் அமர்ந்திருப்பது போல, உங்கள் முகத்திலேயே நேரடியாக மேக்கப் போட்டு எப்படி இருக்கும் என்று காட்டும் வசதியும் இருக்கும். இதன் மூலம் உங்கள் முகத்துக்குத் தேவையான லிப்ஸ்டிக் நிறம், ஃபவுண்டேஷன் நிறம் , கன்சீலர் என அனைத்தும் தேர்வு செய்துகொள்ளலாம். அதனால் எந்த நிறம் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும், எந்த ஸ்டைல் நன்றாக இருக்கும் என்று எளிதில் தெரிந்துகொள்ளலாம்.தினசரி லுக், ஆபீஸ் லுக், பார்ட்டி லுக், திருமண லுக் என பல வகையான மேக்கப் ஸ்டைல்களை இந்த செயலி மூலம் கற்றுக்கொள்ளலாம். மேலும் குறிப்பிட்ட லுக்கிற்கு எந்த தயாரிப்பு நல்லது, எந்த நிறம் உங்களுக்கு பொருந்தும் என்று பரிந்துரையும் தரும். நீங்கள் விரும்பும் மேக்கப் லுக்களை சேமித்து வைத்து பிறகு பார்த்துக் கொள்ளவும் இதில் வசதி உண்டு.