மேஜர் லீக் டி20 கிரிக்கெட் வெற்றி கோப்பை யாருக்கு? நியுயார்க் வாஷிங்டன் மோதல்
அந்த அணியில் கேப்டன் ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் சிறப்பாக ஆடி 42 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி 59 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு இணை சேர்ந்த அகீல் ஹோசின் 55 (32பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), டொனோவன் ஃபெரைரா 32 (20பந்து, 3பவுண்டரி, 1 சிக்சர்) ரன் விளாசி ஆட்டமிழக்காமல் 6 வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்தனர். அதனால் டெக்சாஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன் என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியது.
அதனையடுத்து 167 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியுயார்க் விளையாடியது. குயின்டன் டிகாக் 6, மைக்கேல் பிரேஸ்வெல் 8 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் மோனக் படேல் 49 (39 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ஆட்டமிழக்காமல் கேப்டன் நிகோலஸ் பூரன் 52 (36 பந்து, 4 பவுண்டரி, 3சிக்சர்), கைரன் பொல்லார்ட் 47 (22 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) ரன் விளாசி அணியை 19வது ஓவரிலேயே கரை சேர்த்தனர்.
அதனால் அந்த அணி 3விக்கெட்களை மட்டுமே இழந்து 172 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியுயார்க் 2வது முறையாக எம்எல்சி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. அதையடுத்து, லீக் சுற்றில் 8 ஆட்டங்களில் வென்று முதலிடம் பிடித்த கிளென் மேக்ஸ்வெல் தலைமையிலான நடப்பு சாம்பியன் வாஷிங்டன் ஃபிரீடம் அணியுடன், இறுதிப் போட்டியில் நியுயார்க் அணி மோத உள்ளது. இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நாளை காலை 5.30 மணிக்கு தொடங்க உள்ளது.