மாஜியின் ரகசிய உள்ளடியால் சேலத்துக்காரர் அப்செட்டில் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
இதற்கிடையே கூட்டத்தில் ஆளில்லாமல் வெறிச்சோடிேய கிடந்த காட்சிகள் வீடியோக்களாக சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் மாஜி மீது கடும் கோபத்தில் உள்ளாராம். ஏற்கனவே சேலத்துக்கும், மாஜிக்கும் மனகசப்பு இருக்க உள்ளடி வேலைகள் நடந்துள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளதாம்.
இதனால் தனது ஆதரவாளர்களிடம் முழு தகவலை ரகசியமாக திரட்ட உத்தரவு பறந்துள்ளதாம். மாங்கனியிலிருந்து இலைக்கு தாவிய புள்ளி, சேலத்துக்காரரிடம் நேரடி தொடர்பில் இருந்து மாஜிக்கு எதிராக புதிய அணி உருவாக்கும் வேலையில் இறங்கி இருக்கிறாராம். இதன் தாக்கம்தான், பிரசார கூட்டங்கள் சொதப்பலின் பின்னணியாக இருக்குமோ என்ற பேச்சு இலைக்கட்சியில் பரவலாக எழுந்துள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நடிகரின் கட்சியுடன் இலை கட்சி நிர்வாகிகள் ரகசிய சந்திப்பு நடக்குதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இலையும், தாமரையும் கூட்டணி என்று அறிவித்தாலும் இரு தரப்பிலும் தொடர்ந்து ஏழாம் பொருத்தமாகவே இருக்காம். அதிலும் ஆட்சி தொடர்பாக‘டெல்லி மேலிடம் கூறிய கருத்துக்கு சேலத்துக்காரர் எப்போதும் ஆபோசிட்டாகவே கருத்தை தெரிவிக்கிறாராம். தாமரையோடு கரம் சேர்ப்பதில் சேலத்துக்காரருக்கு பெரியளவில் விருப்பம் இல்லையாம். ஏதோவொரு நிர்ப்பந்தத்துக்காகவே கூட்டணி என்று வாய் அசைக்கிறாராம். அதேநேரத்தில் மனசுக்குள் அதிகார ஆசை நிரம்பி வழிவதால் கூட்டணியில் இருந்தாலும் தனிப்பெரும்பான்மை பெறுவோம். தனிச்சு ஆட்சி அமைப்போம் என்று சொல்லிக்கிட்டு இருக்காராம்.
இதனால் தாமரையுடன் இலை அமைத்துள்ள கூட்டணியில் எந்த நேரத்திலும் விரிசல் வரலாம் என்று விபரம் அறிந்த ரத்தத்தின் ரத்தங்கள் பேசிக்கிறாங்க. இது ஒருபுறமிருக்க, நடிகர் கட்சியுடன் இலை கட்சி நிர்வாகிகள் சிலர் சமீபநாட்களாக நெருக்கம் காட்டிக்கிட்டு வறாங்களாம். அதிலும் மாவட்ட நிர்வாகிகள் அடிக்கடி கலந்து பேசுவது வேறு மாதிரி யோசிக்க வைக்குதாம். எலக்ஷனுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கு. அதற்குள் தாமரையை கழற்றிவிடவும், நடிகரின் கட்சியோடு எங்க கட்சி கூட்டு வைக்கவும் நிறைய வாய்ப்பு இருக்குங்க. நடிகர் எங்களை அட்டாக் பண்ணாமல் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம். எப்படி இருந்தாலும் எங்க சேலத்துக்காரரு தாங்க சி.எம்.கேன்டிடேட் என்று கொளுத்தி போடுறாங்களாம் இலையின் மூத்தநிர்வாகிகள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தோட்டத்துல ஒட்டு கேட்பு விவகாரத்தால் மாஜி பிரபலங்கள் அச்சத்துல இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சேலத்துக்கனி நிறுவனரின் தோட்டத்தில் அவரது இருக்கைக்கு அருகிலே ஒட்டு கேட்பு கருவி கண்டெடுத்த விவகாரம் குடும்பத்தினரையே அதிர்ச்சியடைய செய்துள்ளதாம். வெளிநாட்டு கருவி அங்கு எப்படி வந்தது என்பது குறித்த ஆராய்ச்சி ஏஜென்சி மூலம் நடக்கிறதாம். அந்த கருவிக்கும் சார்ஜ் போட்டாக வேண்டும் என்பதால் நன்கு அறிமுகமானவரே கைக்கூலி வேலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் நிறுவனருக்கு வலுத்துள்ளதாம்.
இந்த சதிசெயலுக்கு யார் திட்டமிட்டது, எதற்காக உரையாடல் ஒட்டு கேட்கப்பட வேண்டும் என்ற விமர்சனம் நிறுவனரின் ஆதரவாளர்களிடம் எழுந்துள்ளதாம். அவரது மகன் தரப்பும் இவ்விவகாரத்தை பூதாகரமாக்க சிலர் மீது சந்தேகம் வலுத்துள்ளதாம் நிறுவனருக்கு. இதனால விசேஷ நிகழ்ச்சியை சாக்குபோக்காக வைத்து சென்னையில் ஏஜென்சியை சந்திக்க பறந்துள்ளராம் நிறுவனர். மேலும், சமீப காலமாக நிர்வாகிகள் படையெடுப்பு தோட்டத்துக்கு அதிகமாகிவர அங்கு பாதுகாப்பை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளாராம். வீட்டின் உள்ளேயும் கண்காணிப்பு கேமரா பொருத்தலாமா என்ற ஆலோசனையில் உள்ளாராம். புகழ்பாடிகளின் பட்டியலை நிறுவனர் ரகசியமாக திரட்டுவது ஒருபுறமிருக்க, தோட்டத்தில் உரையாடிய கனியின் மாஜி பிரபலங்கள் எதிர்காலம் குறித்த அச்சத்தில் இருக்கிறார்களாம்..’ என்றார் விக்கியானந்தா.
‘‘டெண்டர் பணிக்கு பர்சன்டேஜ், பிளாட் போடுறதுக்கு சம்திங்னு ஒரு அதிகாரி நல்லா கல்லா கட்டுறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘குயின்பேட்டை மாவட்டத்துல 3 பேரூராட்சிகள் இருக்கு. இங்கு 6 மாசத்துல பல கோடிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருதாம். இப்பணிக்கு எல்லாம் இளநிலை இன்ஜினியர் ஒருவர்தான் ஆய்வு செய்ய வேண்டுமாம். இப்படி ஆய்வு செய்ற வேலைகளுக்கு அவர் பர்சன்டேஜ் வாங்காம விடுறதில்லையாம்.
அதுல சிலருக்கு பங்கும் கரெக்டா கொடுத்துடுறாராம். பிளாட் போடுறதுக்கு அளவீடு செய்ய சம்திங் வாங்கிடுறாராம். இந்த சம்திங் வாங்குறதுக்கு ஒவ்வொரு ஏரியா பிக்ஸ் செஞ்சிருக்காராம். அங்கதான் போய்ட்டு சம்திங் வாங்குவாராம். புகார் போனாலும் இவர் மேல நடவடிக்கை எடுக்க முடியாதபடி நிலைமை இருக்குதாம். காரணம் யாருக்கு என்ன கொடுக்கணுமோ அதை சரியா கொடுத்துடுறாராம், அந்த பேரூராட்சியில் இந்த புகார் தான் ஹாட்டா போய்கிட்டிருக்குதாம். துறை சார்ந்த அதிகாரிங்க விசாரணை தொடங்க போகுதுன்னு பேசிக்கிறாங்க.,’ என்றார் விக்கியானந்தா.