மகாராஷ்டிராவில் சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை
02:13 AM Aug 14, 2025 IST
மும்பை: சுதந்திர தினத்தன்று இறைச்சி மீன் போன்ற மாமிச உணவுகளை விற்கக் கூடாது என்று மகாராஷ்டிராவின் கல்யாண் டோம்பவலி, நாக்பூர், மாலேகாவ், சந்திரபதி சாம்பாஜிநகர் மாநகராட்சிகள் உத்தரவிட்டுள்ளன. இதற்கு துணை முதல்வர் அஜித் பவார், காங்கிரஸ் தலைவர் விஜய் வட்டேத்திவார் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது மாநகராட்சிகளே எடுத்த முடிவு என்று முதல்வர் பட்நவிஸ் விளக்கம் அளித்துள்ளார்.