மகாராஷ்டிரா மாநிலத்தில் கை ரிக்ஷாவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் கை ரிக்ஷாவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கை ரிக்ஷாவில் மனிதனை இழுத்துச் செல்லும் செயல் மனித மாண்புக்கு எதிரானது. மனிதன் செல்லும் ரிக்ஷாவை மனிதனே இழுத்துச் செல்வது மனிதத் தன்மையற்ற செயல்; நாடு சுதந்திரமடைந்து 78 ஆண்டுகளுக்கு பிறகும் கை ரிக்ஷா புழக்கத்தில் இருப்பதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மராட்டியத்தில் மாதரன் நகரில் கை ரிக்ஷா பயன்பாட்டில் இருப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. கை ரிக்சா ஒழிப்பு திட்டத்தை உடனடியாக மகாராஷ்டிரா அரசு செயல்படுத்த வேண்டும். கை ரிக்சா தொழிலாளர்களுக்கு மின்சார ஆட்டோ வழங்கும் திட்டத்தை மகாராஷ்டிரா அரசு செயல்படுத்த வேண்டும். என்றும் கூறியது. தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியின்போது 1973 ஜூன் 3ல் கை ரிக்ஷா ஒழிக்கப்பட்டது