தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகாராஷ்டிரா உட்பட 4 மாநில தேர்தல் வருவதால் விரைவில் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் கூட்டம்: டெல்லியில் உத்தவ் தாக்கரே முகாம்

புதுடெல்லி: மகாராஷ்டிரா உட்பட 4 மாநில தேர்தல் வருவதால் விரைவில் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. தற்போது டெல்லியில் உத்தவ் தாக்கரே முகாமிட்டுள்ளார். அரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் வரவுள்ளதால், வரைவு வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் பணியை தலைமை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. தற்போதுள்ள சட்டப் பேரவைகளின் பதவிக்காலம் நவம்பர் 3 (அரியானா), நவம்பர் 26 (மகாராஷ்டிரா), ஜனவரி 5 (ஜார்கண்ட்) ஆகிய தேதிகளில் முடிவடையும். மேற்கண்ட 3 மாநிலங்களில் பதவிக்காலம் முடிவதற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.
Advertisement

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் முதன்முதலாக பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய கூட்டணியை ‘இந்தியா’ கூட்டணி திணறடித்தது போன்று, மேற்கண்ட 4 மாநில தேர்தல்களையும் எதிர்கொள்ள வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரியானா, மகாராஷ்டிரா மாநில சட்டப் பேரவை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

அதன் ஒருபகுதியாக நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரும் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதனால் ‘இந்தியா’ கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இந்த வாரம் டெல்லியில் நடைபெறலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. லோக்சபா தேர்தலுக்கு பின்னர் நடக்கும் முதல் கூட்டம் என்பதால், ‘இந்தியா’ கூட்டணியின் எதிர்கால திட்டங்கள் குறித்தும், 4 மாநில பேரவை தேர்தல் குறித்தும் விவாதிக்கப்படலாம். சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, நேற்று முதல் டெல்லியில் முகாமிட்டு எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

கூட்டணி தலைவர்கள் விரைவில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேச உள்ளதாகவும், ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் சந்திக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement