நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 17 அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக ஐகோர்ட் மதுரை கிளை ஆணை!!
மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 17 அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், கரூர் ஆட்சியர், கரூர் எஸ்.பி. உள்ளிட்ட 17 அதிகாரிகள் ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் வெண்ணெய்மலை முருகன் கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றம் தொடர்ச்சியாக பல உத்தரவுகளை வழங்கியும் எந்த பலனும் இல்லை என ஐகோர்ட் கிளை தெரிவித்தது. அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisement
Advertisement