மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில் நடந்து சென்ற கர்ப்பிணி பெண் மீது பைக் மோதி விபத்து
03:52 PM May 21, 2024 IST
Share
மதுரை : மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில் நடந்து சென்ற கர்ப்பிணி பெண் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. கர்ப்பிணி பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி உரிய பாதுகாப்பு தடுப்புகளை அமைத்து போக்குவரத்துக் காவல் துறையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.