மதுரை மீனாட்சி கோயிலில் இலங்கை மாஜி அதிபர் தரிசனம்
மதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நடைபெறும் முன்னாள் இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமானின் மகனும், தற்போதைய இலங்கை எம்பியுமான ஜீவன் தொண்டமானின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே மதுரைக்கு நேற்று விமானம் மூலம் வந்தார். தொடர்ந்து அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மனைவி மைத்ரியுடன் சுவாமி தரிசனம் செய்தார். அவரை கோயில் இணை கமிஷனர் சுரேஷ் தலைமையில் பட்டர்கள் வரவேற்றனர். அம்மன் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்த அவர், சுந்தரேஸ்வரர் சன்னதியில் 30 நிமிடங்களுக்கும் மேலாக தரிசனம் மேற்கொண்டார். இவரது வருகையையொட்டி கோயில் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவரிடம் நிருபர்கள், கச்சத்தீவு விவகாரம் குறித்து கேட்ட கேள்விக்கு, பதில் அளிக்காமல் காரில் ஏறி திருப்பத்தூர் புறப்பட்டு சென்றார்.
Advertisement
Advertisement