மதுரை மாநகராட்சி வரி முறைகேடு பில் கலெக்டர்கள் உள்பட 7 பேர் அதிரடி சஸ்பெண்ட்: கமிஷனர் நடவடிக்கை
Advertisement
இம்முறைகேடு குறித்து மத்திய குற்றப்பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் செந்தில் குமரன், ஓய்வுபெற்ற உதவி கமிஷனர் ரெங்கராஜன் உள்பட 8 பேர் கைதாகினர். மேலும், 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக்குழு தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
முறைகேடு தொடர்பாக 55 பேர் பட்டியல் பெற்று, மத்திய குற்றப்பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாநகராட்சி பில் கலெக்டர்கள் கண்ணன், ராமலிங்கம், ரவிச்சந்திரன், ஆதிமூலம், ரஞ்சித் செல்வக்குமார், பெலிக்ஸ் ராஜமாணிக்கம், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் கருணாகரன் ஆகிய 7 பேரை சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இவர்களிடம் நேற்று சஸ்பெண்ட் உத்தரவு வழங்கப்பட்டது.
Advertisement