மதுரை மாநாடு தவெகவுக்கு திருப்புமுனையாக அமையும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு
திருப்புவனம்: மதுரையில் வரும் 21ம் தேதி தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு, சிவகங்கை தெற்கு மாவட்டம் சார்பில் திருப்புவனத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், ‘‘மதுரை மாநாடு தவெகவுக்கு திருப்புமுனையாக அமையும்.
விஜய் பெயரை கோஷம் போட்டபடி பாதயாத்திரையாக மக்கள் மாநாட்டிற்கு வந்து விடுவார்கள். விக்கிரவாண்டி மாநாட்டில் விஜயை, எதிர்க்கட்சித் தலைவராக மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதேபோல் மதுரை மாநாடு முடிந்ததும் முதல்வராக மக்கள் ஏற்பார்கள். அவர், 2026ல் மகளிருக்கான பாதுகாப்பு ஆட்சியாக அமைப்பார்’’ என்றார்.