மதுரை வியாபாரியை கடத்தி 1.50 கிலோ நகைகள் கொள்ளை
காரைக்குடி: மதுரையை சேர்ந்தவர் விஜயராஜா(40). தங்க நகை வியாபாரி. இவர், தொழில் நிமித்தமாக நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு பஸ்சில் வந்தார். அங்குள்ள நகை வியாபாரிகளிடம் விற்பதற்காக தனது பையில் சுமார் ரூ.1.25 கோடி மதிப்புள்ள 1.50 கிலோ பழைய தங்க நகைகளை வைத்திருந்தார். காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து இறங்கி சிவம் தியேட்டர் அருகே நடந்து சென்றபோது, மர்மநபர்கள் காரில் அவரை கடத்திச் சென்று நகைப்பையை பறித்துக் கொண்டனர். பின்னர் காரைக்குடியில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவில் உள்ள திருமயத்தில் அவரை இறக்கி விட்டு மர்ம கும்பல் தப்பிச்சென்றது.