சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய மேற்கு வ ங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டல ஒடிசா அருகே கரையைக் கடந்த நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வறண்ட வானிலை நிலவுகிறது. அதன் காரணமாக மதுரையில் நேற்று அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் கொளுத்தியது. தூத்துக்குடி, நாகப்பட்டினம் 102 டிகிரி, திருச்சி, தஞ்சாவூர், பரங்கிப்பேட்டை, கடலூர் பகுதிகளில் 100 டிகிரி வெயில் நிலவியது. பிற மாவட்டங்களில் 100 டிகிரிக்கு குறைவான அளவில் வெயில் நீடித்தது. மேலும், த ற்போது மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக 30ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மத்திய, வடக்கு வ ங்கக் கடலின் தெற்கு பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகம் முதல் 65 கிமீ வேகத்தில் இன்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.