மதுரை சிந்தாமணி பகுதியில் வேலம்மாள் குழுமத்தின் புதிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் எம்.எஸ்.தோனி..!!
மதுரை: மதுரை சிந்தாமணி பகுதியில் வேலம்மாள் குழுமத்தின் புதிய கிரிக்கெட் மைதானத்தை எம்.எஸ்.தோனி திறந்து வைத்துள்ளார். மதுரை சிந்தாமணி பகுதியில் வேலம்மாள் குழுமம் சார்பாக 2023 ஆம் ஆண்டு புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மொத்தம் 11.25 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. அதில், பயிற்சி ஆடுகளங்கள், இரு அணிகளின் வீரர்களுக்கான ஓய்வறை, உடற்பயிற்சி கூடம், மருத்துவமனை வசதி உள்ளிட்டவையுடன் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தை அடுத்து தமிழ்நாட்டின் 2-வது மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.325 கோடியில் அமைந்த ஸ்டேடியத்தில் 20,000 பேர் அமரும் வகையில் கேலரி, 500 கார்களை நிறுத்தும் அளவிற்கான பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 7,300 இருக்கைகள் அமைக்கப்பட்டது. இந்த மைதானத்தை சுற்றி 5 அடியளவில் மழைநீர் வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் கிரிக்கெட் மைதான வல்லுநர்களுடன் ஆலோசித்து இந்த மைதானத்தின் செஒளி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மைதானத்தின் சுற்றுப்பகுதியை கண்காணிக்க 197 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு பின் தமிழ்நாட்டின் 2வது பெரிய ஸ்டேடியமாக இது அமைத்துள்ளது.