தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரையில் ஆகஸ்ட் 25ம் தேதி தவெக 2வது மாநில மாநாடு: முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது

அவனியாபுரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 25ம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக, மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தியில் 500 ஏக்கரில் மேல் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Advertisement

மாநாடு திடலுக்கு 237 ஏக்கரும், வாகனங்களை நிறுத்த 217 ஏக்கர் இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநாட்டு முகூர்த்தக்கால் ஊன்றும் விழா நேற்று காலை 5.25 மணிக்கு யாக பூஜையுடன் தொடங்கியது. யாகபூஜை முடிந்தவுடன் காலை 7 மணிக்கு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆக. 25ம் தேதி தேமுதிகவை உருவாக்கிய நடிகர் விஜயகாந்த்தின் பிறந்த நாளாகும். அன்றைய தினம், அவரது சொந்த ஊரான மதுரையில் மாநாடு நடத்த நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார்.

முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி முடிந்ததும், ஆனந்த் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள், மதுரை எஸ்பி அலுவலகத்திற்கு சென்று, தங்களது மாநாட்டிற்கு அனுமதியும், போலீஸ் பாதுகாப்பும் கேட்டு மனு கொடுத்தனர்.

பின்னர் ஆனந்த் கூறுகையில்,

‘‘விதிமுறைகளை பின்பற்றி, மக்களுக்கு இடையூறு இல்லாமல் மாநாடு நடத்தப்படும். முதல் மாநாட்டை விட இரண்டாவது மாநாட்டிற்கு அதிக அளவில் தொண்டர்கள் வருவார்கள். வாகனம் நிறுத்தும் வசதியுடன் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு மையம் அமைந்துள்ளது’’ என்றார்.

இதுதொடர்பாக தவெக தலைவர் நடிகர் விஜய், தனது எக்ஸ் தளத்தில்,

‘‘என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வரும் ஆகஸ்ட் 25ம் தேதி (திங்கட்கிழமை) மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம். நன்றி’’ என கூறியுள்ளார்.

Advertisement