மதுரையில் சாலையோர கடைக்குள் புகுந்த கல்லூரி பேருந்து: விபத்தில் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி
மதுரை: மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே சாலையோர கடைக்குள் கல்லூரி பேருந்து புகுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் அழகர்கோவில் சுற்றி பல்வேறு கல்லூரிகள் இருக்கின்றனர். தினமும் காலை மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து மாணவ, மாணவிகளை பேருந்துகளில் அந்த பகுதிகளுக்கு அழைத்து செல்வது வழக்கம். அதைப்போன்று தான் மதுரை மாவட்டம் அழகர்கோவில் அமைந்திருக்கின்ற ஒரு தனியார் கல்லூரி வாகனம் இன்று காலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றபோது அழகர்கோவில் அருகே இருக்கக்கூடிய பூண்டி என்ற பகுதியில் இந்த தனியார் கல்லூரி பேருந்து வந்துகொண்டு இருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கடைகளில் மோதியது.
அந்த கடையில் அமர்ந்து இருந்த ஆறுமுகம் என்பவரோடைய கால்கள் முழுமையாக துண்டிக்கப்பட்டு கடுமையாக காயம் அடைந்துள்ளனர். உடனடியாக அங்கு இருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி அனுப்பினார். கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து செல்லும்போது ஒரு ஷேர் ஆட்டோ மேல மோதியது அதில் மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் மொத்தம் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இந்த சாலையில் செல்லும்போது கல்லூரி வாகனங்கள் தினமும் வேகமாக செல்வத்தினால் அதனை கட்டுப்படுத்துவதர்க்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளார்.