மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு சிபிஐ விசாரிக்க அன்புமணி கோரிக்கை
Advertisement
சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை மாநகராட்சியின் 2, 3, 4, 5 ஆகிய மண்டலங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கட்டிடங்களுக்கு சொத்து வரியை குறைத்து நிர்ணயித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் மதுரை மாநகராட்சிக்கு ரூ.200 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த முறைகேடு தொடர்பாக ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ரங்க ராஜன், உதவி வருவாய் அலுவலர் செந்தில் குமரன் உள்ளிட்ட 8 பேர் மதுரை மாநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு குறித்து தமிழக அரசு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எனவே, மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement