மதுரை செல்லூரில் வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: மணமகன் வீட்டார் மீது வழக்குப் பதிவு
மதுரை; மதுரை செல்லூரில் வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கணவர் ரூபன்ராஜ் மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தனபாக்கியம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்தாண்டு திருமணத்திபோது மணமகன் வீட்டார் வரதட்சணையாக 300 சவரன் நகை கேட்டபோது பெண் வீட்டார் 150 சவரன் நகை தந்ததாக தகவல். மேலும் 150 சவரன் நகைகள் கேட்டு மணமகன் வீட்டார் தரப்பில் தகராறில் ஈடுபட்டு வந்ததாக புகார். 150 சவரன் நகையால் ஏற்பட்ட பிரச்சனையில் ரூபன்ராஜ் - பிரியதர்ஷினி பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் பிரியதர்ஷினி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தற்கொலைக்கு முயன்ற பிரியதர்ஷினி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரியதர்ஷினி தற்கொலை தொடர்பாக அவரது கணவர் ரூபன் ராஜ், மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தன்பாக்கியம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.