மதுரை மாநகராட்சி வரி வசூல் முறைகேடுபில் கலெக்டர் உள்பட மேலும் 2 பேர் கைது
மதுரை: மதுரை மாநகராட்சியில் சொத்து வரி வசூல் முறைகேடு தொடர்பாக ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் ரங்கராஜன், வருவாய் அலுவலர் செந்தில்குமரன் உள்ளிட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர். ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின்படி மதுரை சரக டிஐஜி அபினவ்குமார் தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழுவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. சிறப்புக்குழு விசாரணையில் பெண் கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் கைதானார். இவரது வாக்குமூலத்தின் பேரில் உதவி கமிஷனர் சுரேஷ்குமார், மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் ஆகியோர் கைதாகினர். இந்நிலையில், மண்டலம் 5ல் 71வது வார்டு பில் கலெக்டரான கார்த்தி (38), மண்டலம் 3ல் பணிபுரியும் பில் கலெக்டரின் உதவியாளர் பாதுஷா (49) ஆகிய 2 பேர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர்.
Advertisement
Advertisement