மதுரையில் குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தில் உள்ள 55 குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க மாநகராட்சி அலுவலருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு..!!
இந்த வழக்கானது உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வி.ஆர்.சுவாமிநாதன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய அவர் மனுதாரரின் அமைப்பு பதிவு செய்யப்பட்ட அமைப்பு, அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையமாக திகழ்கிறது. அந்த மையத்தில் மனுதாரர் மழலை இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள 55 குழந்தைகளுக்கான முழுமையான ஆவணங்களையும் மதுரை மாவட்ட கூடுதல் நீதித்துறை நடுவர் முன்பாக சமர்ப்பித்து தத்தெடுப்பதற்கான உத்தரவுகளை பெற்று அதன் அடிப்படையில் பிறப்பு சான்றிதழ் கோரி மனுதாரர் விமர்சித்துள்ளார்.
ஆனால் மதுரை மாநகராட்சியின் பிறப்பு, இறப்பு பதிவு அலுவலர் ஒன்றிய உள்துறை அமைச்சகம் வழங்கிய வழிமுறைகளை காரணம் காண்பித்து பிறப்பு சான்றிதழ்களை வழங்க தாமதம் செய்துள்ளார். சிறார்களுக்கான நீதி சட்டம் அவர்களின் உரிமையையும், பாதுகாப்பையையும் உறுதி செய்வதை வலியுறுத்தியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையங்கள் முறையாக ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் நிலையில் சான்றிதழை வழங்க வேண்டும் என சிறார் நீதிச் சட்டம், அவர்களின் பாதுகாப்பையும் , உரிமையும் உறுதி செய்வதன் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையத்திற்கு சான்றுகளை வழங்கலாம் என அறிவுறுத்தியுள்ளது. மாநகராட்சியின் பிறப்பு, இறப்பு பதிவு அலுவலர் விரைவாக எவ்வித காலதாமதம் இன்றி 55 குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழ்களை வழங்க உத்தரவிட்டு நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.