மதுரையில் வீட்டிற்கு அருகே சிறுவனை கடித்து குதறிய தெருநாய்: ஒரு மணி நேரப்போராட்டத்திற்கு பின் நாயை பிடித்து சுகாதாரத்துறையினர்
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே பள்ளி சிறுவனையும், அவனது தந்தையும் தெருநாய் கடித்து குதறிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அவ்வப்போது சுற்றித்திரிகின்ற தெருநாய்களை பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், அவ்வப்போது தெருநாய்கள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. இந்த அந்த பகுதியில் இருக்க கூடிய பொதுமக்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் உள்ள ஒரு பகுதியில் 8 வயது சிறுவன் பள்ளி செல்வதற்காக குளிக்க சென்ற போது, அந்த வீட்டின் காம்பவுண்ட் உள்ளே புகுந்த தெருநாய் ஒன்று, அந்த சிறுவனை கடித்து குதறியது. இதையடுத்து சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தெருநாயை விரட்டிய சிறுவனின் தந்தை முத்துச்சாமியையும் தெருநாய் விரட்டி விரட்டி கடித்து குதறியது. இதையடுத்து வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அக்கபக்கத்தினர் ஓடி வந்து தெருநாயை விரட்டி அடித்தனர்.
இதையடுத்து காயம்பட்ட இருவரும் மதுரை அரசு ராஜா மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டு கொண்டு சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத்துறையினர் ஒரு மணி நேரப்போராட்டத்திற் பின் நாயை பிடித்தனர். இதைத்தொடர்ந்து இந்த பகுதி சுற்றித்திரிகின்ற தெருநாய்கள்களை பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.