சென்னை: டெல்லி மதராசி குடியிருப்பு இடிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். 189 குடும்பங்களுக்கு நரேலாவில் வீடுகள் ஒதுக்கப்பட்டாலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.