உத்தரகாண்டில் மதரசா சட்டம் ரத்து
டேராடூன்: உத்தரகாண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசு ‘உத்தரகாண்ட் மதரசா கல்வி வாரிய சட்டம், 2016’ மற்றும் ‘உத்தரகாண்ட் அரசு சாரா அரபு மற்றும் பாரசீக மதரசா அங்கீகார விதிகள், 2019’ ஆகியவற்றுக்கு மாற்றாக புதிய சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்த பழைய சட்டங்கள், 2026ம் ஆண்டு ஜூலை முதல் ரத்து செய்யப்படும்.இந்நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக கொண்டுவரப்பட்டுள்ள உத்தரகாண்ட் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.