மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் இருமல் சிரப் குடித்த 11 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல்..!!
டெல்லி: மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் இருமல் சிரப் குடித்த 11 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் விஷால் திவாரி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவில் இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுநல மனுவில் முன்வைக்கப்பட்டது. குழந்தைகளுக்காக வழங்கப்படும் இரும்பல் மருந்துகள் போன்றவற்றை கண்காணிப்பதற்கான நாடுதழுவிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கப்பட்டது.
குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமானதாக கூறப்படும் இருமல் மருந்துகளுக்கு தேசிய அளவில் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஒன்றிய சுகாதார அமைச்சகத்திற்கு அறிவுறுத்தல்களையும், உத்தரவுகளையும் பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ள மனுதாரர். உலக சுகாதாரத்துறை அமைப்பின் எச்சரிக்கைகளை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகமானது கருத்தில் எடுத்து கொள்ள மறுத்துவிட்டது. அதனால் தான் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார். டிஜியினுடைய அதிக பாதிப்புகள் அதிக அளவில் இந்தியாவில் இருப்பதாக உலக சுகாதாரம் வழங்கிய அறிக்கையை ஒன்றிய சுகாதார அமைச்சகமானது கருத்தில் எடுய்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டையும் பொதுநல மனுவில் முன்வைக்கப்பட்டது.