தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாதவரம் லாரி நிறுத்த மையத்தில் மின் பில்லர் தடையாக இருப்பதால் மழைநீர் கால்வாய் பணி முடக்கம்

மாதவரம்: சென்னை மாதவரம் ரவுண்டானா அருகில் சிஎம்டிஏ லாரி நிறுத்த மையம் உள்ளது. இங்கு உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருகின்ற நூற்றுக்கணக்கான லாரிகள் நிறுத்தப்பட்டு பின்னர் செல்கின்றன. ஏராளமான புக்கிங் அலுவலகங்களும் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த லாரி நிறுத்த மையம் சுமார் ரூ.40 கோடி செலவில் சீரமைக்க திட்டமிடப்பட்டு முதல்கட்டமாக கான்கிரீட் சாலை அமைக்கும் பணி முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து மழைநீர் கால்வாய், மின்விளக்கு ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

இந்தநிலையில் பழைய மழைநீர் கால்வாயில் மீது மின்சார பில்லர் இருப்பதால் புதிய மழைநீர் கால்வாய் அமைக்க முடியாமல் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள்,மாதவரம் மின்சார வாரியத்துக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக கால்வாயில் தண்ணீர் தேங்கி போக முடியாமல் சாலையில் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் லாரிகள் சென்றுவருவதில் பெரிய சிரமம் ஏற்பட்டுள்ளதுடன் பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மழைநீர் கால்வாய் மீது மின்சார பில்லரை இடமாற்றம் செய்துவிட்டு மழைநீர் கால்வாய் பணியை மீண்டும் தொடரவேண்டும், சாலையில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News