மாதம்பட்டி ரங்கராஜின் காதல் லீலை ஜாய் கிரிசில்டா வெளியிட்ட வீடியோ
சென்னை: தமிழில் ‘மெஹந்தி சர்க்கஸ்’, ‘கேசினோ’, ‘மிஸ் மேகி’, ‘பெண்குயின்’ ஆகிய படங்களில் நடித்துள்ள சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ், மாதம்பட்டி கேட்டரிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவருக்கு ஏற்கனவே ஸ்ருதி என்பருடன் திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் காதலித்து வருவதாக தகவல்கள் பரவியது. ஜாய் கிரிசில்டா ஏற்கனவே ஜே.ஜே.பிரெட்ரிக் என்ற திரைப்பட இயக்குனரை திருமணம் செய்து பிரிந்தவர்.
சில வாரங்களுக்கு முன்பு மாதம்பட்டி ரங்கராஜுக்கும், தனக்கும் திருமணமான போட்டோக்களை ஜாய் கிரிசில்டா வெளியிட்டு, தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. முதல் மனைவி ஸ்ருதியை விவாகரத்து செய்யாமல், எப்படி 2வது திருமணம் செய்ய முடியும் என்ற விவாதம் இணையதளங்களில் வைரலானது. சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராமில் இருந்து, ஜாய் கிரிசில்டாவுடன் ஏற்கனவே எடுத்திருந்த எல்லா போட்டோக்களையும் நீக்கிவிட்டார்.
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொள்வதாக சொல்லி ஏமாற்றிவிட்டார் என்று, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜாய் கிரிசில்டா புகார் அளித்தார். மேலும், தன்னை சந்திப்பதை அவர் தவிர்ப்பதாகவும், திருமணம் செய்துகொள்வது பற்றி கேட்டால் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தன்னுடன் வாழ விரும்பவில்லை என்று சொல்வதாகவும் பேட்டி அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு அனுப்பிய வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் ஜாய் கிரிசில்டா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‘ஓய் பொண்டாட்டி... என்னடி பண்ற பொண்டாட்டி... ஐ மிஸ் யூ... ஐ லவ் யூ பொண்டாட்டி’ என்று மாதம்பட்டி ரங்கராஜ் காதல் ததும்ப பேசியுள்ளார். இந்த வீடியோவை பதிவிட்டது மட்டுமின்றி, ‘தனது குழந்தையை சுமந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்யக்கூடிய ஆண் யாரையும் காட்டிக்கொடுப்பான்’ என்று ஜாய் கிரிசில்டா பதிவிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.