மாதம்பட்டி மீதான திருமண புகார் வழக்கு.. ஜாய் கிரிஸ்டில்லாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது!
சென்னை: திருமண புகார் வழக்கு நடந்துவரக்கூடியநிலையில், ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கோயம்புத்தூரைச் சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ், தனதுத் தனித்துவமான சமையல் மற்றும் கேட்டரிங் தொழிலால் பிரபலமானார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே முதல் மனைவி ஸ்ருதி மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டில்லாவுடன் ஏற்பட்டத் திருமணம் மற்றும் உறவுச் சிக்கல்களால் அவர் சர்ச்சையில் சிக்கியிருந்தார்.
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகக் கூறி, ஜாய் கிறிஸ்டில்லா ஏற்கனவேப் புகார் அளித்திருந்தார். மேலும், ஜீவனாம்சம் கேட்டு அவர் நீதிமன்றத்தையும் நாடியிருந்தார். இந்தக் குடும்பப் பிரச்சனைகள் தொடர்பான வழக்குகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஜாய் கிறிஸ்டில்லாவிற்க்கு என்று குழந்தை பிறந்து இருக்கிறது. தற்போது ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஜாய் கிரிசில்டாவுக்கு இன்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்ததாக தெரிகிறது.
இதனை அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குழந்தையைப் பெற்றெடுத்திருக்கும் கிறிஸ்டில்லா குடும்பத்தில் புதிதாகச் சேர்ந்திருக்கும் ராகா ரங்கராஜுக்குப் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், குழந்தை பிறந்திருப்பதால் ஜாய் கிரிஸ்டில்டா தரப்பில் இன்று விசாரனைக்கு நேரில் ஆஜராக முடியாமல் கால அவகாசம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இன்று மதியம் மாதம்பட்டி ரங்கராஜ் மட்டும் ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
