மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலின் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள்
சிவகங்கை: தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற கோயில்களில் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த 9 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. 40 நாட்களுக்கு ஒருமுறை கோயிலின் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிகாரிகளின் முன்னிலையில் எண்ணப்படும்.
கோயிலுக்கு வரும் வெளிநாட்டு பக்தர்கள் ரூபாய் நோட்டுகளாகவே காணிக்கை செலுத்துவது வழக்கம். ஆனால் முதன் முறையாக மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் உண்டியலில் ஒரு பக்தர், ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த திர்ஹாம் எனப்படும் 230 நாணயங்களை மஞ்சள் துணியில் கட்டி செலுத்தியிருந்தார்.
மேலும் உண்டியலில் 234 ரூபாய் வெளிநாட்டு நோட்டுகளும் செலுத்தப்பட்டுள்ளது. முதன் முறையாக வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் அதிகளவில் கிடைக்க பெற்றுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். த
ற்போது ஆடி மாதம் என்பதால் உண்டியல் காணிக்கை இன்று எண்ணப்பட்டது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை உண்டியலில் செலுத்தப்பட்ட நாணயங்கள், தங்க நகைகள், வெள்ளி நகைகள் உள்ளிட்டவை கணக்கிடப்பட்டது.
இதில் சுமார் ரூ.22 லட்சம் ரொக்கமும், 73 கிராம் தங்கமும், 178 கிராம் வெள்ளியும், கோசாலை உண்டியலில் சுமார் ரூ.59 ஆயிரம் ரொக்கமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.