தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார் மாநில மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிசில்டா புகார்

சென்னை: சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா மாநில மகளிர் ஆணையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். கோவை சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, குழந்தை கொடுத்துவிட்டு ஏமாற்றியதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸ்டில்லா கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் மீது விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் அருண் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் வனிதா விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

Advertisement

அதன்படி, துணை கமிஷனர் வனிதா கடந்த மாதம் புகாரின் மீது ஜாய் கிரிஸ்டில்லாவிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தார். அப்போது ஜாய் கிரிஸ்டில்லா, மாதம்பட்டி ராங்கராஜுடன் ஒன்றாக இருந்த புகைப்படங்கள் மற்றும் இருவரும் தேனிலவுக்கு வெளிநாடுகள் சென்ற புகைப்படங்கள் அனைத்தும் ஆவணங்கள் மற்றும் எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா என்றும், 3 முறை கருக்கலைப்பு செய்ததற்கான ஆவணங்களை துணை கமிஷனரிடம் கொடுத்திருந்தார்.

அதன்படி துணை கமிஷனர் மாதம்பட்டி ரங்கராஜனிடம் விசாரணை நடத்தினார். மேலும், இவருவரின் வழக்கும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதேநேரம் மாதம்பட்டி ரங்கராஜிடம் சில ஆவணங்களை விசாரணை அதிகாரி கேட்டிருந்தார். இருவரின் மீதான விசாரணை நடந்து வரும் நிலையில், ஜாய் கிரிசில்டா தனது வழக்கறிஞரான நாடாளுமன்ற உறுப்பினர் சுதா உடனே நேற்று சேப்பாக்கம் பகுதியில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் தலைவர் குமாரியை சந்தித்து, வழக்கறிஞரும் எம்பியுமான சுதா உடன் புகார் ஒன்று அளித்தார்.

பிறகு ஜாய் கிரிசில்டா மற்றும் வழக்கறிஞரான நாடாளுமன்ற உறுப்பினர் சுதா ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றி சென்றுவிட்டதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தோம். அதன் பிறகு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள துணை கமிஷனர் வனிதாவிடம் புகார் அளித்திருந்தோம். அந்த புகாரின் மீது 4 நாட்கள் கழித்து விசாரணைக்கு ஜாயை அழைத்தார்கள். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரணை நடந்தது.

அதன் பிறகு நாங்கள் யார் மீது புகார் அளித்தோமோ அவரை கூப்பிட்டு விசாரணை நடத்தியதாக தெரியவில்லை. நாங்கள் மகளிர் ஆணையத்தின் மீதும், தமிழக அரசின் மீதும் நம்பிக்கை வைத்து புகார் கொடுத்துள்ளோம். திருமணம் செய்து இரண்டரை வருடங்கள் குடும்பம் நடத்திவிட்டு, ஒரு குழந்தையை கொடுத்துவிட்டு மாதம்பட்டி ரங்கராஜ் சென்றுவிட்டார். எனவே திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Advertisement