தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மான் நடிகை திடீரென அரசியலில் குதித்த காரணத்தை சொல்கிறார்: wiki யானந்தா

கடற்கரைக்கு வந்திருந்த பீட்டர் மாமாவும், விக்கியானந்தாவும் கடலில் கால் நனைத்து திரும்பினர். வரும் வழியில் பீட்டர் மாமா கேட்கத் தொடங்கினார். ‘‘மாவட்ட அதிகாரியை மிஞ்சும் அளவுக்கு லேடி அதிகாரியின் பவர்புல்லால் ஊழியர்கள் மிரண்டுபோய் இருக்கிறார்களாமே..’’ என்றார். ‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தில் பவர்புல் அலுவலகத்தில் மாவட்ட அதிகாரியின் நேர்முக உதவியாளராக பதவியேற்றுள்ள, துணை ஆட்சியர் நிலையில் உள்ள லேடி அதிகாரி நடவடிக்கையால் அலுவலக ஊழியர்கள் மிரண்டு போயிருக்கிறார்களாம்..

அவர்கள் மட்டுமா, அரசு உதவிக்காக மனு கொடுக்க வரும் மக்களும்தானாம்.. பொதுமக்கள், விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடக்கும் அறையின் அருகாமையில் இருந்த பொதுக்கழிவறையில் ஆண்கள் பிரிவை அகற்றிவிட்டு நோ என்ட்ரி போர்டு வைத்தாராம்.. மேலும் கழிவறையை அரசு ஊழியர்களே சுத்தம் செய்ய வேண்டுமென தடாலடி காட்டி, இதை கண்காணிக்க அதிகாரியை நியமித்து கடிதம் வாயிலாக உத்தரவிட்டு சம்பந்தப்பட்ட நபர்களிடமே அதை வழங்கியும் இருக்காராம்..

வாரத்திற்கு ஓரிரு நாள் மட்டுமே அலுவலகத்திற்கு வரும் லேடி அதிகாரி, சரியான நேரத்திற்கு பணிக்கு வருகிறாரோ, இல்லையோ மற்றவர்கள் எல்லாம் சரியான நேரத்தில் வர வேண்டுமாம்.. இல்லையென்றால் அவ்வளவுதான்... என மிரட்டும் தொனியில் பேசி மாவட்ட அதிகாரியை மிஞ்சி ஒருபடி மேலாக நான்தான் எல்லாம்... என்ற நிலையை ஏற்படுத்தி ஒட்டுமொத்த அலுவலகத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளாராம்.. பொறுத்துப் பொறுத்து பார்த்த ஊழியர்கள் கடைசியில் வருவாய்த்துறை சங்கம் மூலமாக போராட்டத்தை அறிவிக்க தயாராகி வருகிறார்களாம்..

இந்த பவர்புல் லேடி பற்றிதான் புரம் முழுக்க பரவலாக பேச்சு ஓடுகிறது..’’ என்றார் விக்கியானந்தா. ‘மீண்டும் களைகட்டும் ரெஸ்டோ பார்களால் உள்ளூர்வாசிகள் அப்செட்டில் இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘சுற்றுலா பகுதியான புதுமையான சேரியில் ரெஸ்டோ பாரில் நடந்த கொலையால் ஆளும்தரப்புக்கு நெருக்கடி ஏற்பட்டதாம்.. கலால் துறையை முடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்தி 10க்கும் மேற்பட்ட ரெஸ்டோ பார் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி அதிரடி காட்டியதாம்..

கோடிக்கணக்கில் ‘ப’ விட்டமின் செலவிட்டு உரிமம் பெற்றிருந்த வெளிமாநில தரப்போ கொந்தளித்தார்களாம்.. தொடர் விடுப்பு நாட்களில்தான் எங்களுக்கு வருமானமே... தவறு நடந்த பாரை மூடிக்கோங்க.. அதை விடுத்து எங்களுக்கும் தடை என்றால் எப்படி என சாமியிடம் எகிறினார்களாம்.. இதனால் அடுத்த ஓரிரு நாளிலே தடை அனைத்தும் விலக்கப்பட்டதாம்.. மீண்டும் ரெஸ்டோ பார்கள் களைகட்ட இளசுகள் பட்டாளம் படையெடுத்து உள்ளதாம்.. கொலை நடந்தால் என்ன, கூத்துகள் அரங்கேறினால் நமக்கென்ன எனும் நிலையில் ஆளும்தரப்பு காய்களை நகர்த்தியதால் உள்ளூர்வாசிகளோ கடும் அப்செட்டில் உள்ளார்களாம்..

இதுபற்றிதான் புதுச்சேரி முழுக்க பரவலாக பேச்சு..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கான்ட்ராக்ட் டீலிங்கில் ஒத்துவராத ஆவின் மேலாளர்களை காலி செய்து விடுகிறாராமே முன்னாள் அதிகாரி..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சென்னை ஆவின் நிறுவன பிளானிங் துறையில் பணியாற்றிய மேலாளர் கடந்த 3 மாதத்திற்கு முன்பு பணி ஓய்வு பெற்றாராம்.. இவர் பணியில் இருக்கும் போதே பல்க் மில்க் கூலர் தயாரிக்கும் புனே தனியார் நிறுவனத்துக்கு கூலர் தயாரிக்க கான்ட்ராக்ட் கொடுத்து இருக்கிறாராம்..

ஆவினில் பணி ஓய்வு பெற்ற உடனே அந்த தனியார் நிறுவனத்தில் சென்று அதிகாரியாக பணிக்கு சேர்ந்து விட்டாராம்.. தனது செல்வாக்கை பயன்படுத்தி ஆவின் எம்.டி-யை கைக்குள்ள போட்டு வச்சிருக்கிறாராம்.. அப்புறம் எல்லா ஊர்களில் இருக்கும் ஆவின் பொதுமேலாளர்களை தன் வீட்டிற்கே வரவழைத்து அவங்க கிட்ட தனது நிறுவனத்திற்கு கான்ட்ராக்ட் அளிக்க டீலிங் பேசி பணம் கேட்டு மிரட்டுகிறாராம்.. அவர் மிரட்டலுக்கு ஒத்துவராத பொதுமேலாளர்களை காலி செய்து விடுகிறாராம்..

அப்படி, இவரால காஞ்சிபுரம், விருதுநகர், நீலகிரி, திருநெல்வேலி பொதுமேலாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்காங்களாம்.. தவிர, பல இடங்களில் மேனஜர்களையும் இடமாற்றம் செஞ்சுருக்கிறாராம்.. இவரோட டார்ச்சர் நாளுக்கு நாள் அதிகமாகிட்டு இருக்காம்.. இதனால ஆவின் பொதுமேலாளர்கள் மிரண்டு போய் இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மான் நடிகை அரசியலில் திடீரென குதிக்க என்ன காரணம்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சி தலைவரின் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர்களில் தூங்கா நகரத்து செல்லமானவரின் பிள்ளையும் ஒருவராம்.. தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருக்கும் அவர், இலைக்கட்சி தலைவரின் கண்ணில் தூசி விழுந்தாலும் சட்டென தட்டிவிடும் அளவுக்கு செல்வாக்கு உள்ளவராம்.. இவர், இலைக்கட்சி தலைவருக்கு திரைத்துறையிலும் செல்வாக்கு இருக்குன்னு நிரூபிக்கும் வகையில் நடிகைகளை சேர்ப்பதில் ரொம்பவே ஆர்வம் கொண்டவராம்.. இப்படித்தான் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசும் கவரிமான் நடிகையை இலைக்கட்சிக்கு கொண்டுவரும் வேலையில் தீவிரமாக இருந்தாராம்..

இதற்காக சென்னையில் இருந்து இலைக்கட்சி தலைவரின் ஊருக்கு அந்த மான் நடிகையை அழைச்சிட்டு வந்தாராம்.. கட்சியில் சேர்ந்தவுடன் பொறுப்பு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை நெஞ்சில் வாங்கிக்கிட்டு, இலைக்கட்சி தலைவருக்கு முந்திரி கொத்தை வாங்கிக்கிட்டு வந்தாராம் அந்த மான்.. அவரும் இன்முகத்தோடு வரவேற்று பேசினாராம்.. ஆனால் இந்த மான் நடிகையோ பேச்சு சுதந்திரம் என எதையாவது பேசி பெரும் சிக்கலில் சிக்க வைத்து விடுவாரே என இலைக்கட்சி தலைவரின் காதில் ஊதுனாங்களாம்.. இந்த நிலையில் தான் தெலுங்கு மக்களைப்பற்றி பேசி சிக்கிக்கொண்டாராம்..

இவரை தேடி போலீசார் ஆந்திரா போன போது, கட்டிலுக்கு அடியில் பதுங்கிக்கொண்டதாகவும் சொல்றாங்க... ஜெயிலுக்கு போய் திரும்பி வந்தபோது, மான் நடிகையை பார்த்து ‘‘மக்கள் தலைவி’ என அவரது அடிப்பொடிகள் கூவி அழைச்சாங்களாம்.. இந்த வார்த்தையை கேட்ட மான் நடிகை ரொம்பவே நெகிழ்ந்துபோனாராம்.. இதற்கு அப்புறம்தான் அரசியலில் இறங்கி முகவரியை பெற்றுக்கொண்டு ஒரு ஆட்டம் ஆடிடணும் என்ற எண்ணம் மேலோங்கியதாம்.. இலைக்கட்சி தலைவரை நம்பினோம், அவரும் பதவி கொடுக்கலன்னு இருக்கும்போது தான், மலராத கட்சி நினைவுக்கு வந்திருக்கு..

அந்த கட்சியில் தான் நிறைய பொறுப்பு இருக்கு.. உடனே பதவி வந்துடுமுன்னு ஆசைவார்த்தை கூறி அல்வாக்காரரிடம் அழைச்சிட்டு போய் சேர்த்து விட்டாங்களாம்.. இதன்மூலம் ஒரு பதவி கிடைத்தால் நானும் ஒரு குஷ்புதான் என கனவுலகில் மிதக்கிறாராம் அந்த மான் நடிகை.. அதே நேரத்தில் இவரை இலைக்கட்சி தலைவரிடம் அழைச்சிக்கிட்டு போன தூங்கா நகரத்துக்காரரோ மேல்சபை பதவி கிடைக்கலையே என்கிற சோகத்தில் ஆழ்ந்திருக்காராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.